வேண்டாம் ஆபத்து...! சிறுநீரகத்தை பாதிக்கும் குளிர்பானங்கள்..!

வேண்டாம் ஆபத்து...! சிறுநீரகத்தை பாதிக்கும் குளிர்பானங்கள்..!

கோடைகாலம் என்பதால் நாடெங்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. ஆங்காங்கே 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் கொளுத்தி வருகிறது. இது போன்ற நேரத்தில் குளிர்ச்சியாக எதையேனும் குடித்தால் சற்று இதமாக இருக்கும் என அனைவரும் நினைப்பதுண்டு. ஆனால் அப்படி நாம் குடிக்க நினைக்கும் பானங்கள் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களாக இருக்கும் பட்சத்தில் அவை உங்கள் சிறுநீரக்த்தை கூட பாதிக்கலாம்.

How To Keep Your Drinks Cold On A Day Out - FreshMAGAZINE

சுவையூட்டப்பட்ட இது போன்ற குளிர்பானங்களில் கார்பனேற்றம் செய்யப் பட்டிருப்பதால் இவை எளிதில் நாக்கை அவற்றிற்கு அடிமைப்படுத்தி விடுகின்றன. இப்படி குளிர்பானங்களுக்கு அடிமைப்படுத்தப் படும்போது அவற்றை மேலும் மேலும் பருகத்தோன்றுகிறது. அப்படி 2 இரண்டுக்கும் மேற்பட்ட முறை குளிர்பானங்களை பருகும் போது அவை நமது சிறுநீரகத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. Why does soda fizz? | Live Science

நாள் ஒன்றுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட சுவையூட்டப்பட்ட சோடாக்களையோ குளிர்பானங்களையோ பருகும்போது நாள் பட்ட சிறுநீரக பாதிப்புகளும் உண்டாகலாம். இது போன்ற பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களில் வெறும் கலோரிகளை மட்டும்கொண்ட சக்கரைத் தன்மை அதிகமாக இருப்பதால், இவை நீரிழிவு நோய்களையும் ஏற்படுத்தலாம். எனவே புட்டிகளில் அடைக்கப்பட்ட சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து அதற்கு மாற்றீடாக பழச்சாறுகளை பருகுவது நீர்ச்சத்தை அதிகபடுத்துவதால் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். ஒருவேளை நீங்கள் சுவையூட்டப்பட்ட சோடாக்களையோ குளிர்பானங்களையோ தொடர்ந்து பருகும் பழக்கம் கொண்டவர்கள் என்றால் அவற்றை குறைத்துக்கொள்வது நல்லது. வெயிலுக்கு சிறிது நேரம் ஆறுதலை தருவதற்காக நாம் பருகும் குளிர்பானங்கள் நமது உடல் நலத்தையே சீர்கெட செய்யலாம்.