ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரையும் ஒன்றிணைப்பாரா மோடி..?...ஜூலை 28 -ல் நடக்கப்போவது என்ன?

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரையும் ஒன்றிணைப்பாரா மோடி..?...ஜூலை 28 -ல் நடக்கப்போவது என்ன?

செஸ் ஒலிம் பியாட் போட்டியின் தொடக்கவிழாவிற்கு தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடியை, ஓ பிஎஸ்-இ பிஎஸ் இருவரும் சந்தித்து பேசவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது...

ஜூன் 14:

அதிமுகவில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்ததையடுத்து அதிமுக இரண்டாக பிளவு பட்டது. அதுவரை கட்சியின் இரட்டை துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த ஈ. பி.எஸ் மற்றும் ஓ. பி.எஸ் இருவரும் தற்போது எதிரெதிரே நின்று மோதி கொண்டனர்.

ஜூலை 11:

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஈ. பி.எஸ் இடைக்காலப் பொதுசெயலாளர் ஆனார். பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் சென்றதால் அங்கு இரு தரப்புக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார். அதன் பின் சீலை அகற்றக்கோரி ஈ. பி.எஸ் மற்றும் ஓ. பி.எஸ் இருவரும் வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஓ. பி.எஸ் நீக்கம்:

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்ற பின் கட்சியின் அடிப்படை உறுப் பினர் பதவியில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் ஓ. பி.எஸ் நீக்கப்பட்டார். அதேபோன்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ. பி.எஸ் நீக்கப்பட்டதாகவும், எம். பி.ரவீந்திரநாத்தும் கட்சியின் அடிப்படை உறுப் பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ஈ. பி.எஸ் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் ஒன்றும் எழுதினார். அதற்கு பதில் கடிதமாக, கட்சியின் அடிப்படை உறுப் பினர் பதவியில் இருந்தும்,  எம். பி. பதவியில் இருந்தும் ரவீந்திரநாத்தை நீக்கியதாக ஈ. பி.எஸ் எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓ. பி.எஸ்  கடிதம் எழுதியிருந்தார்.

ஈ. பி.எஸ் ஸின் டெல்லி - சென்னை பயணம்:

இப்படி கட்சி இரண்டாக பிளவுபட்டு, கலவரம் வெடித்திருக்கக்கூடிய நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈ. பி.எஸ், நேற்று  நான்கு நாள் பயணமாக டெல்லி சென்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்துக்கொண்டார். பின்னர், மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், நேரம் வழங்கப்படாத காரணத்தால் ஈ பிஎஸ் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவை புறக்கணித்துவிட்டு சென்னை வந்துவிட்டார். மேலும், அமித்ஷா மற்றும் மோடி இருவரும் பிஎஸ் சந்திப் பிற்கு நேரம் வழங்காதது ஓ. பி.எஸ்.ஸின் அழுத்தம் தான் காரணம் எனவும், இதனால் ஈ பிஎஸ் அதிருப்தியுடன் சென்னை திரும்புவதாகவும் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரதமர் தமிழ்நாடு வருகை:

அதிமுக உட்கட்சி பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, வருகிற ஜூலை 28 ஆம் தேதி சர்வதேச செஸ் ஒலிம் பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் தொடக்கவிழாவிற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழ்நாடு வருகை தரவுள்ளார். 

பிரதமரை ஒன்றாக சந்திக்கும் ஈ. பி.எஸ், ஓ. பி.எஸ்:

செஸ் ஒலிம் பியாட் போட்டி தொடக்கவிழாவிற்காக வருகிற ஜூலை 28ஆம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ள பிரதமர் மோடியை, ஓ பிஎஸ் மற்றும் இ பிஎஸ் இருவரும் சந்தித்து பேசவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, ஈ. பி.எஸ், ஓ. பி.எஸ் இருவரையும் ஒன்றாக சந்திக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப் பின் போது, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடுவாரா? அப்படி ஒருவேளை தலையிட்டால்  இரண்டாக  நிற்கும் ஓ. பி.எஸ் மற்றும் ஈ. பி.எஸ் இருவரையும் ஒன்றாக இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவாரா நரேந்திர மோடி? என்ற கேள்விகள் எழுகின்றது. 

ஈ. பி.எஸ், ஓ. பி.எஸ் இருவரையும் ஒன்றிணைப்பாரா மோடி?:

முன்னதாக , அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா அவர்களின் இறப் பிற்கு பிறகு, சசிகலா அந்த பதவியில் வகித்தார். அதன் பின் சசிகலாவும் சிறைக்கு சென்றதால், எடப்பாடி பழனிசாமியை அப்போதைய முதலமைச்சர் பதவியில் அமர்த்திவிட்டு சென்றார் சசிகலா. அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இதேபோன்று தனிதனியாக பிரிந்து செயல்பட்டனர். அப்போது அந்த பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு அவர்களை இணைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போதும் அதேபோன்று அவர்களின் பிரச்சினையில் தலையிட்டு முடித்து வைப்பாரா? என்ற கேள்விக்கு தள்ளுகிறது வருகிற 28 ஆம் தேதி பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை. ஜூலை 28 ஆம் தேதி தான் தெரியும்... ஈ. பி.எஸ், ஓ. பி.எஸ் இருவரையும் பிரதமர் சந்திகிறாரா? அவர்கள் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.