தமிழ்நாடு அமைச்சரவையும் சிறுபான்மையினரும்! 

தமிழ்நாடு அமைச்சரவையும் சிறுபான்மையினரும்! 

1956 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதுதான் இன்றைய தமிழ்நாடு. மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பின்னர் நடந்த 1957 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.  இதன் மூலம் காமராசர் மீண்டும் மதராஸ் மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். அவருடன் சேர்ந்து எம்.பக்தவத்சலம், பி.கக்கன் உள்ளிட்ட 7பேர் அமைச்சராக பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவராக லூர்தம்மாள் சைமன் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

லூர்தம்மாள் சைமன் - தமிழ் விக்கிப்பீடியா

தமிழ்நாடு அமைச்சரவையில் மத சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் லூர்தம்மாளுடன் தான் தொடங்கியது. அவர்தான் தமிழ்நாடு அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட முதல் மத சிறுபான்மையினர் ஆவார். பின்னர் 1962 இல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது எஸ்.எம்.அப்துல் மஜீத் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவரே தமிழ்நாட்டில் அமைச்சராக பொறுப்பேற்ற முதல் இஸ்லாமியர். 

எஸ். எம். அப்துல் மஜீத் - தமிழ் விக்கிப்பீடியா

தொடர்ந்து,1967ஆண்டு நடந்து தேர்தலில் அப்போது எழுச்சிப் பெற்று வந்த திமுக காங்கிரசை தோற்கடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. திமுகவை நிறுவிய அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்க, அதன் அமைச்சரவையில் கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்டோரோடு சாதிக் பாட்ஷாவும் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சி மட்டுமின்றி, திமுகவின் ஆட்சியிலும் மத சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் உறுதிபடுத்தப்பட்டது.Image

திமுக பொதுச்செயலாளராக இருந்து அண்ணாதுரையின் இறப்பிற்கு பிறகு மு.கருணாநிதி திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார்.  கருணாநிதியின் தலைமையில் 1971 சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த திமுக மீண்டும் வெற்றிபெற்றது. அப்போது அமைக்கப்பட்ட அமைச்சரவையிலும் கூட சாதிக் பாட்ஷா அமைச்சராக தொடர்ந்தார். அப்போது அவர் வருவாய்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களால் திமுகவில் பிளவு ஏற்பட்டது. இதில் திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சியாக உருவாகி இருந்த அதிமுக எம்.ஜி.ஆரின் தலைமையில் 1977ல் ஆட்சியை பிடித்தது. M Karunanidhi with M G Ramachandran.

அதுவரை தமிழ்நாடு அமைச்சரவையில் ஒரு நபராக இருந்த மத சிறுபான்மையினரின் பலம் அப்போது இரண்டு நபர்களாக அதிகரித்தது. எம்.ஜி.ஆரின் தலைமையில் அமைந்த முதல் அதிமுக அமைச்சரவையில் ஜி.ஆர்.எட்மண்ட் உணவுத்துறை அமைச்சராகவும் மற்றும் அப்போதைய மேலவை உறுப்பினராக இருந்த ராஜா முகமது கைத்தறித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். மீண்டும் 1980ல் எம்.ஜி.ஆரே ஆட்சியை கைப்பற்றிய போது ஒய்.எஸ்.எம்.யூசுப் நீர்வளத்துறை மற்றும் வக்பு வாரிய அமைச்சராகவும் எச்.வி.ஹன்டே பொது சுகாதாரத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.ஆர். எட்மண்ட் காலமானார்- Dinamani

பின்னர் 1984ல் சிறுபான்மையினர் எவரும் அமைச்சராக இல்லாத நிலையில், 1989 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய திமுக சாதிக் பாட்ஷாவையே மீண்டும் அமைச்சராக ஆக்கியது. இரண்டாண்டு காலம் கூட நீட்டிக்காத அவ்வரசு குடியரசு தலைவரால் ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், 1991ல் நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது.

S. J. Sadiq Pasha.jpg

ஜெயலலிதா தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மீண்டும் இரண்டாக மாறியது. இதில் கே.லாரன்ஸ் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும்  நாகூர் மீரான் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். பின்னர் 1996ல் ஆட்சி பொறுப்பேற்ற திமுக ரஹ்மான் கானை  தொழிலாளர் துறை அமைச்சராகவும்  ஜெனிபர் சந்திரனை மீன்வளத்துறை அமைச்சராகவும் மாற்றியது. இதன் மூலம் திமுகவின் அமைச்சரவையிலும் சிறுபான்மையினர் பலம் 2 ஆக அதிகரித்தது. தொடர்ந்து, 1991 முதல் திமுக, அதிமுக என யார் ஆட்சி பொறுப்பேற்றாலும் அமைச்சரவையில் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த இருவர் கட்டாயம் இடம் பெற்றனர். Former Minister Nagur Meeran dies | முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மரணம்

இதை தற்போது 10ஆண்டுகளுக்கு பிறது ஆட்சியை கைப்பற்றிய  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் பின்பற்றியது.  2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற திமுக, அமைச்சரவையில் எஸ்.எம்.நாசரை பால்வளத்துறை அமைச்சராகவும் செஞ்சி மஸ்தானை சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலம் அமைச்சராகவும் ஆக்கியது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.நாசர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்பார் எனவும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  டிஆர்பி ராஜா தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மேலும் ஐந்து அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டது.

1957 ல் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை வெறும் 7 பேராக இருந்த போது ஒரு நபராக இருந்த சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம், 1977ல் இரண்டாக மாறியது. பின்னர் அதே நிலையில் தக்க வைக்கப்பட்ட இப்பிரதிநிதித்துவம் தற்போது மீண்டும் ஒன்றாக குறைந்துள்ளது. தொடங்கியது சமூகநீதி மாநாடு

ஏற்கனவே மத்தியில் ஆளும் பாஜக அரசில் ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட பிரதிநிதித்துவம் இல்லாத நிலை உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இஸ்லாமியர் இல்லை என்பதும் விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. இந்நிலையில் பாஜவை எதிர்க்க மரசார்பின்மை மற்றும் சமூகநீதி கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கும் திமுகவும் மத சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை அமைச்சரவையில் குறைத்துள்ளது. இது சிறுபான்மை மக்களிடையே திமுக மீது அதிருப்தி ஏற்பட வழிவகுக்கக் கூடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

-ச.பிரபாகரன்

இதையும் படிக்க:தப்பித்த கயல்விழி, தவறவிட்ட தமிழரசி!