எல்லை பிரச்சினையிலும் தகராறா....பிரச்சினையிலும் ஒன்றிணையாத தாக்கரே ஷிண்டே!!!

மகாராஷ்டிராவின் ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் போராடுவேன்.  மகாராஷ்டிரா இந்த விஷயத்தில் அமைதியாக இருக்காது.  மகாராஷ்டிராவின் எல்லைப் பகுதி மக்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டோம்.

எல்லை பிரச்சினையிலும் தகராறா....பிரச்சினையிலும் ஒன்றிணையாத தாக்கரே ஷிண்டே!!!

‘பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கர்நாடகா’குறிப்பிடும் தாக்கரே, 'கர்நாடகாவால் ஆக்கிரமிக்கப்பட்ட மகாராஷ்டிரா' என்ற சொற்களைக் குறிப்பிட்டதோடு எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை இந்தப் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.  

எதிர்க்கட்சிகளின் போராட்டம்:

கர்நாடகா மாநிலத்துடனான் எல்லைப் பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, முதலமைச்சர் ஷிண்டேவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்சனை தற்போது வரை முடிவுக்கு வரவில்லை.  நாக்பூரில் உள்ள விதான் பவன் முன்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

அதே நேரத்தில், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, இது தொடர்பாக சபையில் கொண்டு வரப்பட்ட முன்மொழிவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார்.  எல்லைப் பிரச்சனையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அமைதியாக இருப்பதாகவும், கர்நாடக முதலமைச்சர் வெளிப்படையாக பேசுவதாகவும் தாக்கரே குற்றம் சாட்டினார்.

'PoK' க்குப் பிறகு 'KoM':

‘பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கர்நாடகா’குறிப்பிடும் தாக்கரே, 'கர்நாடகாவால் ஆக்கிரமிக்கப்பட்ட மகாராஷ்டிரா' என்ற சொற்களைக் குறிப்பிட்டதோடு எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை இந்தப் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.  மகாராஷ்டிராவின் சட்டப் பேரவையின் மேல்சபையில் எல்லைப் பிரச்சனையை எழுப்பிய தாக்கரே,  இது மொழி அல்லது எல்லைப் பிரச்சனை மட்டுமல்ல, மனித நேயத்தின் பிரச்சினை என்றும் கூறியுள்ளார். 

மேலும் தெரிந்துகொள்க:   நீ நிலம் தரலானா நான் தண்ணீர் தரமாட்டேன்...ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் முதலமைச்சர்கள்...காரணம் என்ன?!!!

மேலும் மராத்தி மொழி பேசுபவர்கள் எல்லையோர கிராமங்களில் தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர்களின் மொழி, வாழ்க்கை முறை அனைத்தும் மகாராஷ்டிராவை சார்ந்தே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, இப்பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

பதிலளித்த ஃபட்னாவிஸ்:

தாக்கரேவுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவின் ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் போராடுவேன் என்று கூறியுள்ளார்.  மேலும் மகாராஷ்டிரா இந்த விஷயத்தில் அமைதியாக இருக்காது எனவும் மகாராஷ்டிராவின் எல்லைப் பகுதி மக்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய ஃபட்னாவிஸ் உச்ச நீதிமன்றமோ, மத்திய அரசோ, ஒவ்வொரு அங்குல நிலத்துக்காகவும் போராடுவோம் எனவும் எல்லையோர மக்களுக்கு அநீதி இழைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். 

1957ம் ஆண்டு முதலே..:

1957ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதில் இருந்தே இரு மாநிலங்களுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை நிலுவையில் உள்ளது.  முந்தைய பம்பாய் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக இருந்த மராத்தி மொழி பேசும் 800 கிராமங்களைக் கொண்ட பெலகாவியை மகாராஷ்டிரா அரசு தற்போது உரிமை கோருகிறது.  

இது மராத்தி பேசும் மக்களை அதிக அளவில் கொண்டுள்ளது.  அவை தற்போது கர்நாடகாவின் ஒரு பகுதியாக உள்ளன.  மறுபுறம், மாநில மறுசீரமைப்புச் சட்டம் மற்றும் 1967 மகாஜன் கமிஷன் அறிக்கையின்படி மொழிவாரியாக எல்லை நிர்ணயம் செய்வதே இறுதியானது என கர்நாடகா கருதுகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பூட்டோ குடும்பம் தொடர்ந்து இந்தியாவை எதிர்க்க காரணமும் பின்னணியும் என்ன?!!!