ஓ.பி.எஸ்க்கும் அழைப்பு விடுத்த இந்திய தேர்தல் ஆணையம்..!

ஓ.பி.எஸ்க்கும் அழைப்பு விடுத்த இந்திய தேர்தல் ஆணையம்..!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்திருந்தது. அந்த ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்யும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அப்போது வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம்-6டீ-ஐ பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆணை பிறப் பித்தையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக அதிமுக தரப் பினருக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார் பில் கடிதம் அனுப்பப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி தரப் பில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது.

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய ஓ. பி.எஸ்:

தேர்தல் ஆணையம் ஓ. பி.எஸ் க்கு தனியாக அழைப்பு விடுக்கவில்லை. ஒற்றை தலைமை பிரச்சனையால் கட்சி தலைமை அலுவலகம் இ பிஎஸ் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப் பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஓ. பி.எஸ் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, தங்களது அணியினரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என ஓ. பி.எஸ் தரத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஓ. பி.எஸ்ஸின் கடிதத்தை ஏற்றுக்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம்:

நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி கடிதம் எழுதிய ஓ. பி.எஸ்ஸின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதனால் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு  ஓ பிஎஸ் தரப் பில் தற்போதைய எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 

சந்தேகம்:

முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையம் ஈ. பி.எஸ்க்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்ததையடுத்து, ஓ. பி.எஸ் க்கு பின்னடைவா? என்ற கேள்வியெல்லாம் எழுந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் தற்போது ஓ. பி.எஸ்ஸின் கோரிக்கையை ஏற்று அவருக்கு அழைப்பு விடுத்து இருப்பது, இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக உட்கட்சி பிரச்சனையில் என்ன முடிவு எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பை அரசியல் பார்வையாளர்களிடையே அதிகரிக்க செய்கிறது. தற்போது ஓ. பி.எஸ் க்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம் ஏன் முதலில் அழைப்பு விடுக்க வில்லை என்ற கோணத்தில் ஆராய்ந்து வருகின்றனர் வல்லுநர்கள்.