பசுவதை சட்டத்தை தூக்கி பிடிக்கும் மத்திய அரசு லம்பி வைரஸை கண்டுகொள்ளாதது ஏனோ?!!!

பசுவதை சட்டத்தை தூக்கி பிடிக்கும் மத்திய அரசு லம்பி வைரஸை கண்டுகொள்ளாதது ஏனோ?!!!

லம்பி வைரஸ் அச்சமூட்டும் வகையில் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் 15 மாநிலங்களில் உள்ள 251 மாவட்டங்களில் பரவி 20.56 லட்சத்துக்கும் அதிகமான பசுக்களை பாதித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் பசுக்களை கொன்றுள்ளது. ராஜஸ்தானில் 13.99 லட்சத்துக்கும் அதிகமான பசுக்கள் பாதிக்கப்பட்டு, 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. இது கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளையும் நேரடியாக பாதித்து வருகிறது. 

லம்பி வைரஸ்:

ராஜஸ்தானில் முதலில் தொடங்கிய லம்பி வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், 8 லட்சம் மாடுகளுக்கு லும்பி நோய் தாக்கியுள்ளது. மாநிலத்தில் 22 மாவட்டங்களில் கட்டி தோல் நோய் பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லம்பி வைரஸால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளால், மாநிலத்தில் பால் உற்பத்தியும் குறைந்துள்ளது. பால் தட்டுப்பாடு காரணமாக பல மாவட்டங்களில் அதன் விலையும் உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: வைரஸின் மூலமும் அரசியல் ஆதாயம் தேடுகிறதா பாஜக!!!

பாதிப்பு:

நாட்டில் 3.60 கோடிக்கும் அதிகமான பசுக்கள் லம்பி வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் 23 மாலை வரை 97,435 மாடுகள் உயிரிழந்துள்ளன. இருப்பினும், அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிவரங்கள் இறப்புகள் இன்னும் அதிகம் எனக் கூறுகின்றன.  பசுக்களை நோயில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தொடர்ந்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

2019ல் தாக்கிய லம்பி:

2019 ஆம் ஆண்டிலேயே லம்பி தொற்று ஏற்பட்டு விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் நிர்வாகத்தினர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் முன்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நிலைமை மோசமடையாமல் காப்பாற்றியிருக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.  அதே நேரத்தில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் சஞ்சீவ் பாலியன் கூறுகையில், ”லம்பி வைரஸைத் தடுக்க தடுப்பூசி பிரச்சாரத்தை வழக்கமான முறையில் சேர்க்க மத்திய அரசு பரிசீலிக்கும். முற்றிலும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது” என்றும் கூறியுள்ளார். 

தடுப்பூசி:

”வெள்ளாடுகளுக்கு அளிக்கப்படும் ஆடு பாக்ஸ் தடுப்பூசி 100% லும்பி வைரஸுக்கு எதிராக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு 1,38,58000 தடுப்பூசி அளவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தற்போது 1.47 கோடி டோஸ்கள் உள்ளன. அக்டோபரில் நான்கு கோடி டோஸ் அனுப்பப்படும்.” என மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் தெரிவித்துள்ளார்.

தேசிய குதிரை ஆராய்ச்சி மையம் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், இசத்நகர் உடன் இணைந்து இந்த வைரஸுக்கு உள்நாட்டு தடுப்பூசியை தயாரித்துள்ளது. Lumpi-Pro Vacc-ind என்று பெயரிடப்பட்ட இந்தத் தடுப்பூசியை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். விரைவில் தடுப்பூசி சந்தைக்கு வரவுள்ளது. அதன் தயாரிப்பு பொறுப்பு பயோவாட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:    முன்னாள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த இந்நாள் பிரதமர்!!!!