நான் கற்றுக் கொண்ட முதல் தமிழ் வார்த்தை..! ஆனந்த் மகேந்திராவின் அசத்தல் ட்வீட்..!

ஆனந்த் மகேந்திராவுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் நெட்டிசன்கள்..!

நான் கற்றுக் கொண்ட முதல் தமிழ் வார்த்தை..! ஆனந்த் மகேந்திராவின் அசத்தல் ட்வீட்..!

பொங்கல் பண்டிகைக்கு பிரபலங்கள் ஒரு ஒருவரும் தங்களது வாழ்த்துகளை நேரிலும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் ஆனந்த் மகேந்திரா பொங்கல் அன்று தான் கற்றுக் கொண்ட முதல் தமிழ் வார்த்தை இது தான் என போட்டுள்ள ட்வீட் அனைவரையும் கவர்ந்துள்ளது. அப்படி அவர் கற்றுக் கொண்ட அந்த தமிழ் வார்த்தை என்னவென்று பார்ப்போம்.... இந்தியாவில் அசைக்க முடியாத இயந்திரம் மற்றும் வாகன நிறுவனம் என்றால் அது மகேந்திரா. தற்போது இதன் தலைவராக உள்ளவர் ஆனந்த் மகேந்திரா. இந்திய 
தொழிலதிபர்களில் முன்னணியில் உள்ள இவரதுசொத்து மதிப்பு சுமார் 190 கோடி டாலர் என பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கூறியிருந்தது. 

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா. பல சுவாரஸ்யமான விஷயங்களை தனது ட்விட்டர் மூலம் உலகிற்கு பகிர்ந்து மக்கள் மனதில் இடம் பிடிப்பவர் ஆனந்த். அவரது ட்வீட்டில் தொழில் சார்ந்த விஷயங்கள், விழிப்புணர்வு, நகைச்சுவை, சுவாரஸ்யம் என அத்தனையும் இருக்கும்.அண்மையில் கூட நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை உள்ள 70 ஹேர்பின் வளைவுகள் குறித்து இவர் ட்விட்டரில் பகிர்ந்தார். எரிக் சோல்ஹைம் என்ற வெளிநாட்டவர் ஒருவர் ஆச்சரியமூட்டும் இந்தியா என குறிப்பிட்டு 70 கொண்டை ஊசி 
வளைவுகளுடன் காணப்படும் இந்தியாவின் திரில்லான சாலைகளில் ஒன்று தமிழகத்தில் கொல்லிமலை என 
குறிப்பிட்டுள்ளார். அதற்கான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார். இதை ரீட்வீட் செய்த ஆனந்த் மகிந்திரா, "எரிக் என் நாடான இந்தியா குறித்து எத்தனை குறைந்த விஷயங்கள் எனக்கு தெரிந்துள்ளது என்பதை உங்கள் ட்வீட் காண்பிக்கிறது. இது தனிச்சிறப்பு. இந்த சாலையை எப்படி கட்டியிருப்பார்கள் என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறேன் என பகிர்ந்தார். இவரது ட்வீட் மூலம்தான் தமிழகத்தின் கொல்லிமலை உலகளவில் பிரபலமானது தெரியவந்தது.

இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று ஆனந்த் மகிந்திரா போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. அதில், அவர் நான் பள்ளிப் படிப்பை தமிழகத்தில் முடித்தேன். அதனால் தமிழில் நான் கற்றுக் கொண்ட முதல் சொல் ஒன்று உள்ளது. அந்த சொல்லை நான் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறேன். சில சமயம் உரக்கவும் 
சொல்லியிருக்கிறேன். சில சமயங்களில் மனதிற்குள் சொல்லியிருக்கிறேன்.தமிழ் எப்போதுமே திறமையான மொழி. ஆங்கிலத்தில் நாம் யாரிடமாவது உங்களது பேச்சை கேட்கவோ அல்லது உங்கள் கருத்தை அறியவோ எனக்கு நேரமில்லை. அதனால் என்னை விடுங்கள் என சொல்வதற்கு தமிழில் எளிதாக போடா டேய் என சொன்னால் போதும். சென்னையில் யாராவது எனது வண்டி மீது இடித்துவிட்டால் அவர்களை திட்டுவதற்கு 
கைவசம் நிறைய தமிழ் வார்த்தைகளை கற்று வைத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அவருக்கு கமெண்ட்டில் நிறைய தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.