இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் வரலாறு...30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதல்!

இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும், பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல் போக்கானது காசா பகுதியில் நடைபெற்று வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

மத்திய கிழக்கில் பாலத்தீனம் என்னும் பகுதியை ஆண்டு வந்த ஓட்டோமான் அரசாட்சியை முதலாம் உலகப்போரில் வீழ்த்திய பிறகு, அந்த பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அந்த பகுதியில் யூத சிறுபான்மையினரும், அரபு பெருமான்மையினரும் குடி புகுந்தனர். பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு தேசிய பகுதி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனுக்கு வழங்கின.

இதில் தான் பதற்றம் நிலவியது. யூதர்களை பொறுத்தவரை அது அவர்கள் பூர்வீகம். ஆனால் பாலஸ்தீனிய அரபு மக்களும் அந்த பகுதிக்கு சொந்தம் கொண்டாடி இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐரோப்பாவின் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் நடந்த ஹாலோ காஸ்ட் படுகொலையில் இருந்து தப்பி தாயகம் வேண்டி 1920 முதல் 1940 வரையிலான கால கட்டத்தில் அங்கு யூதர்களின வரவு அதிகரித்தது. இதனால் யூத அரபு மக்களுக்கு இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன.

1947ஆம் ஆண்டு பாலஸ்தீனம் யூதர் மற்றும் அரபு பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. ஜெருசலேம் சர்வதேச தலைநகரமானது. இந்த திட்டம் யூத தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், அரபு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.

1948 ஆம் ஆண்டு இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட இயலாத பிரிட்டன் ஆட்சியாளர்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறினர்.யூத தலைவர்கள் இஸ்ரேல் உருவானதாக அறிவித்தனர். அண்டை நாடுகளைச் சேர்ந்த படைகள் படையெடுத்து வந்தன. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறினர்

ஜோடான் மேற்குக்கரை என்னும் இடத்தை ஆக்கிரமித்தது, எகிப்து காசாவை ஆக்கிரமித்தது, ஜெருசலத்தின் மேற்கில் இஸ்ரேலிய படைகள், கிழக்கில் ஜோடார்னிய படைகள் என பிரிக்கப்பட்டது. ஏனென்றால் அங்கு அமைதி ஒப்பந்தம் என்ற ஒன்று ஏற்படவே இல்லை.

1967 நடைபெற்ற போரில் கிழக்கு ஜெருசலத்தையும், மேற்கு கரையையும், காசா மற்றும் எகிப்து சீனா தீபகற்ப பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றியது.  பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் அண்டை நாடுகளில் வசிக்கின்றனர். ஆனால் இந்த அகதிகளோ அவர்களின் குடும்பத்தினரோ அவர்கள் வீடுகளுக்கு திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.

இதையும் படிக்க : இஸ்ரேல் உருவான கதை...யூதர்கள் உருவாக்கிய நாடு...!

கிழக்கு ஜெருசலம் காசா மற்றும் மேற்கு கரையில் வசிக்கும் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடையே அவ்வப்போது சண்டைகள் நிலவி வருகிறது. காசா பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹமாஸ் குழுவினருக்கு ஆயுதங்கள் செல்வதை தடுக்க இஸ்ரேல் மற்றும் எகிப்து காசா எல்லைகளை கட்டுப்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே ஒப்புக்கொள்ளாத பல விசயங்கள் உள்ளன. மேற்கு கரையில் உள்ள யூத குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டுமா, இருதரப்பும் ஜெருசலேத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமா, இஸ்ரேலுக்கு பக்கத்தில் பாலஸ்தீன நகரம் உருவாக்க பட வேண்டுமா போன்ற பிரச்சனைகள் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. 

இந்நிலையில் காசா பகுதியிலிருந்து ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் பகுதியில் 7 ஆயிரம் ஏவுகணைகளை கொண்டு தாக்கியதில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனை எப்போது முடியும் என்று பார்க்கலாம்.