கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்து வந்த பாதை...!

கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்து வந்த பாதை...!

மூன்று முறை உலகக் கோப்பை வென்ற கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் காலமானார். உலகம் முழுவதும் கால்பந்தாட்ட ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ள நிலையில், பீலே கடந்து வந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில்  பார்க்கலாம்.

எடிசன் என்ற பீலே:

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 1940-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி பீலே பிறந்தார். தாமஸ் ஆல்வாஸ் எடிசனின் நினைவாக இவருக்கு எடிசன் என்ற பெயர் சூட்டப்பட்டது. பீலே என்பது இவரது செல்லப் பெயராகும். அவரது தந்தை தொழில்முறையான கால்பந்தாட்ட வீரராக இருந்தவர். இதனால் பீலேவுக்கு கால்பந்தாட்ட நுணுக்கங்களை அவரே கற்று கொடுத்தார்.  

18 வயதில் உலக கோப்பை வென்றவர்:

இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரரான பீலே, 15வது வயதில் சாண்டோஸ் அணிக்காக விளையாட துவங்கினார். இதனைத் தொடர்ந்து 16வது வயதிலேயே பிரேசில் அணியில் இடம்பிடித்தார். 1958-ல் தனது 18ஆவது வயதில் உலகக் கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார். இதன்மூலம், இளம் வயதில் கால்பந்து உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

3 முறை உலகக்கோப்பை:

தொடர்ந்து 1962ஆம் ஆண்டிலும், பிரேசில் அணி உலகக் கோப்பை வெல்ல பீலே முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதன்மூலம், தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார். பீலேவின் சாதனை அதோடு முடிந்துவிடவில்லை. 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையிலும் கோப்பையை வென்றுகொடுத்து, யாரும் படைக்க முடியாத சாதனையாக மூன்றுமுறை உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற சாதனை படைத்தார். 

இதையும் படிக்க: பைக்கில் வித்தியாசமாக பயணித்த காதல் ஜோடி...போலீசாரால் அதிரடி கைது...!

கின்னஸ் புத்தகத்தில் பீலே:

உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருந்தார். கால்பந்து மன்னன் என்றழைக்கப்பட்ட பீலே தனது வாழ்நாளில் ஆயிரத்து 279 கோல்களை அடித்துள்ளார்.  1977ஆம் ஆண்டில் ஓய்வினை பெற்ற இவர், கால்பந்தின் சிறப்பு தூதராக செயல்பட்டு வந்தார். 1995 முதல் 1998 வரை பிரேசில் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சராக இவர் செயல்பட்டார். 

புற்றுநோய் பாதிப்பால்; மறைந்த பீலே:

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பீலே புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். வயது மூப்பு காரணமாக சிகிச்சைக்கு இவரது உடல் ஒத்துழைக்கவில்லை. கடந்த நவம்பர் 29ஆம் தேதி, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒருமாத கால போராட்டத்திற்கு பிறகு, இன்று காலமானார். அவருக்கு வயது 82
அவரது மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.