முன்னாள் கணவர் மீது பாடகி இசைவாணி காவல்நிலையத்தில் புகார்..!

ஆசிட் அடித்து விடுவேன் என மிரட்டுவதாக குற்றச்சாட்டு..!

முன்னாள் கணவர் மீது பாடகி இசைவாணி காவல்நிலையத்தில் புகார்..!

ஆசிட் அடித்து விடுவேன் என மிரட்டுவதாக பிரபல கானா பாடகி இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொதுவாக கானா பாடல் என்பது மக்களுக்கு மிகவும் பிடித்தமான இசை. மக்களின் வாழ்க்கை முறையை இந்த பாடல்கள் குத்து இசையுடன் விளக்குவதால் மக்கள் மத்தியில் இதன் செல்வாக்கு அதிகம். அதிகபட்சமாக சென்னையில் தான் இந்த இசை ஒலிக்கப்படுகிறது. கானா பாடல்களை பாடுபவர்களும், அதனை எழுதி இயக்குபவர்களும் வட சென்னையில் தான் அதிகம் காணப்படுகின்றனர். ஆண்களுக்கே உரித்தான, உரிமையான இசையாக இருந்த கானா இசைக்குள் பெண்களாலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என நிரூபித்துக் காட்டியவர் பின்னணி பாடகி இசைவாணி. 

இவரது தந்தையும் கானா பாடகர் என்பதாலும், சிறு வயதிலிருந்தே இசையை முறைப்படி கற்றுக் கொண்டதாலும், அவருக்கு இசை சகஜமாக வரும். பெண்கள் கானா பாடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆண்கள் முதலில் அதனை அனுமதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு திறமை என்பது கூட ஆண், பெண் என பிரிந்து கிடப்பது தான் வேதனையான உண்மை. ஆனால் அவற்றை உடைத்து எறிந்து பல மேடைகளிலும், திரைப்படங்களிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார் இசைவாணி. கானா பாடல் மூலம் பிரபலமான இசைவாணி, தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் ரீயாலிட்டி ஷோ மூலம் மேலும் பிரபலமானார். இவருடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றால், கடந்த வருடம் ஆர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சர்பட்டா பரம்பரை படத்தில் பச்சக்கல்லு மூக்குத்தி என்ற பாடலை பாடியிருந்தார் இசைவாணி. 

பொதுவாக ஒருவர் பிரபலமாகிறார் என்றாலே அவரது தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் மக்களுக்கு அதிகம் ஆர்வம் ஏற்படும். அந்த வகையில், இசைவாணி பற்றி பலருக்கும் தெரியாதது அவருக்கு திருமணம் நடைபெற்றது தான். கானா பாடகர் ஸ்ரீகாந்த் தேவா என்பவரை திருமணம் செய்து கொண்ட இசைவாணி, பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திருமணமான ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றார். ஆனால் எந்தஒரு மேடையிலும் அவர் தனக்கு திருமணமாகிவிட்டது என்றோ விவாகரத்து ஆனதையோ வெளிப்படுத்தியது இல்லை. தனது திருமணத்தை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. அந்த மறக்க நினைப்பதால், அதைப் பற்றி வெளியில் அதிகம் கூறுவதில்லை என கூறியிருந்தார் இசைவாணி. இந்த நிலையில், தற்போது தற்போது இவருடைய முன்னாள் கணவர் பல தொந்தரவுகள் கொடுத்துக் கொண்டிருப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் இவருடைய முன்னாள் கணவரான சதீஷ்க்கு டைவர்ஸ் பெற்ற பிறகு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இசைவாணிக்கு தெரியாமல் இசைக்கச்சேரியில் இவரைப் பாட வைப்பதாக கூறி பலரிடமும் பணம் வாங்கியுள்ளாராம். அவர்கள் இசை வாணி பாட செல்லாததால் இசைவாணி இடம் தகராறு செய்து வருகிறார்களாம். இது தன்னுடைய நற்பெயரக்கு தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருக்கிறார்.

மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் அவரிடத்தில் இதைப்பற்றிக் கேட்கும் போது, அப்படி தான் செய்வேன்... உன்னால் என்ன செய்ய முடியும் என்று தகாத வார்த்தைகளால் திட்டியும், நீ கச்சேரிக்கு செல்லும் போது உன் மீது ஆசிட் வீசி விடுவேன், என்றும் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இசைவாணி மற்றும் சதீஷ் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விவாகரத்திற்கு பிறகும் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி வருகிறாராம், இதனால் நான் மிகவும் மன உளைச்சலில் இருந்து வருகிறேன் அதுமட்டுமல்லாமல் டைவர்ஸ் பெற்ற விஷயங்களை பொய் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.