முடிவுக்கு வந்த வேலை நிறுத்தப் போராட்டம்...முதலமைச்சர் பேசியது என்ன?

முடிவுக்கு வந்த வேலை நிறுத்தப் போராட்டம்...முதலமைச்சர் பேசியது என்ன?

புதுச்சேரியில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த மின்துறை ஊழியர்களின் போராட்டம் முதலமைச்சர் ரங்கசாமி உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது. வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக தெரிவித்த ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப ஒப்புக்கொண்டனர் ...

கால வரையற்ற வேலை நிறுத்தம்:

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

தமிழிசை எச்சரிக்கை:

இந்நிலையில் ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர புதுச்சேரி மாநில அரசு தீவிரமாக முயற்சித்து வந்தது. செயற்கை மின் தடையை ஏற்படுத்தும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படிக்க: அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்...ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!

6வது நாளாக போராட்டம்:

மேலும் பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை பொறியாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. எனினும் இந்த எச்சரிக்கைகளை புறக்கணித்து மின்துறை ஊழியர்கள் 6வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கைவிட்ட ஊழியர்கள்:

இந்த சூழலில் மின்துறை ஊழியர்களுடன் முதலமைச்சர் ரங்கசாமி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக மின்துறை ஊழியர்கள் அறிவித்தனர். மேலும் உடனடியாக பணிக்கு திரும்புவதாகவும் அறிவித்தனர்.