டீ பிரியர்களின் கவனத்திற்கு... டீ யில் இவ்வளவு வகை இருக்குங்க ? 

டீ பிரியர்களின் கவனத்திற்கு... டீ யில் இவ்வளவு வகை இருக்குங்க ? 

அன்றாடம் ஒவ்வொருவரின் வாழ்வும் ஒரு மிடறு டீ யில் இருந்து தான் தொடங்குகிறது. தேநீருக்கு ஒரு முழு நாளையும்  உற்சாகத்துடன் மாற்றும் வல்லமை உள்ளது. ஒரு நாளைக்கு 4 அல்லது 5 டீ-க்கும் அதிகமாக குடிப்பவர்களையும் காண முடிகிறது. அதிலும் வகை வகையாக அதன் ருசியை கொஞ்சம் கொஞ்சமாக பருகும் போதும்  ஒவ்வொரு துளி தொண்டையில் இறங்கும் போதும் பரவசம் காணலாம். இஞ்சி டீ, ஏலக்காய் டீ, புதினா டீ, கிரீன் டீ, ஹெர்பல் டீ, லெமன் டீ, மசாலா டீ, தந்தூரி டீ, மூலிகை டீ, செம்பருத்தி டீ என்று ருசியுடன் பலவகைகளில் டீ கிடைக்கிறது. 

டீ பற்றிய  வரலாறு:-

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தேயிலையானது,  புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் வழியாக ஜப்பானுக்கும், அதன் பிறகு  டச்சுக்காரர்கள் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. சுமார் 180 ஆண்டுகள் பழமையான தேயிலைத் தொழில் உற்பத்தியை இந்தியா கொண்டுள்ளது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் என்ற சிறப்புகளை பெற்றவைகளாகும்.  கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பலவகைப்படும். 

இதையும் படிக்க : கையுடன் இணைந்த டார்ச் லைட்...!

டீ குடிப்பதால் ஏற்படும் நன்மை என்ன தெரியுமா ?

இஞ்சி டீ குடிப்பதன் மூலம் உடல் புத்துணர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான சக்தி ஆகியவை கிடைக்கிறது. பிளாக் டீ யில் தோல் சார்ந்த பிரச்சனையை குறைக்கும் ஆற்றல் உள்ளது. உடல் பருமன் உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பது நலம் பயக்கும். பெண்களின் மாதவிடாய்க்காலங்களில் வலியை குறைப்பதற்கு மூலிகை தேநீர் உதவுகிறது. தோல் பளபளப்பை ஏற்படுத்த வெள்ளை டீ, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செம்பருத்தி டீ பருகலாம். இது போன்று பல நன்மைகளை டீ குடிப்பதன் மூலம் பெறலாம். 

டீ யின் சிறப்புகள் :- 

* 17ம் நூற்றாண்டில் பிரபலமடைந்த தேயிலை இன்று எல்லோருடைய நாளிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

* ஜப்பான்,சீனா,வியட்நாம் போன்ற நாடுகளில் தேநீர் விழா கொண்டாடப்படுகிறது.

* அரசு விழாக்களில், மத விழாக்களில், நண்பர்கள் ஒன்றுகூடும் போது தேநீர் விருந்து நடத்துகின்றனர். 

* தேயிலை பற்றி படிக்கும் கலை படிப்பிற்கு டேசியோகிராபி என்று பெயர்.

ரொம்ப சோர்வாக இருக்கா கவலை படாதீங்க...கொஞ்சமா தலை வலிக்குதா சீக்கரமா சரி பண்ணிடலாம்
பிடிச்ச டீ எல்லாம் ருசி பாத்துடுங்க..ஏன்னா டீ குடிக்குறது ரிலாக்ஸ் தரும்...


- லாவண்யா ஜீவானந்தம்