தொண்டனின் காலை பிடித்து கண்கலங்கிய திருமாவளவன்..!

அதாங்க எங்க தலைவர்..! இணையத்தில் நெகிழும் சிறுத்தைகள்..!

தொண்டனின் காலை பிடித்து கண்கலங்கிய திருமாவளவன்..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுராந்தகம் ஒன்றிய பொறுப்பாளர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.  அப்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட நபரை ஆம்புலன்ஸ் வேனில் படுக்க வைத்துள்ளனர். அவருக்கு சுயநினைவு இல்லை.. மூக்கில் ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ளது.. ஆம்புலன்ஸ் உள்ளேயே உட்கார்ந்து, சிகிச்சை பெறும் நபரின் காலை நேசத்துடன் அழுத்தி பிடித்து, கலங்கி காணப்படுகிறார் திருமாவளவன்.. அதேபோல, இன்னொரு போட்டோவும் ஆம்புலன்சிலேயே எடுக்கப்பட்டுள்ளது.. அங்குள்ள அவரது குடும்பத்தினருக்கு கையை பிடித்து ஆறுதல் சொல்கிறார் திருமாவளவன். பொதுவாக, கட்சிக்காரர்கள் உடல்நலம் குன்றியிருந்தால் அவர்களை சிகிச்சை பெறும் மருத்துவமனையிலோ அல்லது வீடுகளிலோ சென்று சந்திப்பதுதான் தலைவர்களின் வழக்கம். ஆனால் திருமாவளவனை பாருங்க சிகிச்சை நடக்கும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியிலேயே ஏறி உட்கார்ந்தது மட்டுமில்லாமல், உடல்நலம் குன்றிய தொண்டநின் காலை பிடித்து கண்கலங்கி அழுகிறார். அதோடு குடும்பத்தினருக்கு நம்பிக்கை தருவதும்  அக்கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதுதான் எங்க தலைவர் திருமா, இது தான் மனிதம் என்ற வாசகங்கள் அடங்கிய ட்வீட்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு நன்றி செலுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். குறிப்பாக, எந்த தலைவரும் எழுச்சி தலைவர் போல இருக்க மாட்டார்கள், விடுதலை சிறுத்தைகள் தாய் எழுச்சி தமிழர் என்பதற்கு இந்த படம் சாட்சி.. தலைவனை பார்த்ததும் காலில் விழும் அரசியலில், தொண்டரின் காலை பிடித்து கண்கலங்கிய தலைவர் உண்டா? அதாங்க எங்க தலைவர் என ட்விட்டரில் திருமாவளவனின் செயலைக் கண்டு நெகிழ்ந்து போகின்றனர்.