மத்திய பட்ஜெட் 2022 மற்றும் 2023: ஒரு ஒப்பீடு!!!

மத்திய நிதியமைச்சர் சீதாராமன், ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைக்கும் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்2023:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடியும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
கடந்த நிதி ஆண்டை விட...:
அதே நேரத்தில், ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைக்கும் நிதி ஒதுக்கீட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த நிதி ஆண்டை விட இந்த ஆண்டு ரயில்வேயில் இருந்து பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்...
ரயில்வே துறை:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டில் ரயில்வேக்கு மொத்தம் ரூ 2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார். இது இன்றுவரை அதிகபட்சமாக உள்ளது. 2022ல், 1.40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதால் இது கடந்த நிதி ஆண்டை விட, 100 கோடி அதிகம்.
இது தவிர, 2013-14ஐ ஒப்பிடும் போது, இந்த பட்ஜெட் கிட்டத்தட்ட 9 மடங்கு அதிகம்.
பாதுகாப்பு துறை:
பாதுகாப்புத் துறைக்கு மொத்தம் ரூ.5.94 லட்சம் கோடியும், 2022ல் ரூ.5.25 லட்சம் கோடியும் ஒதுக்கப்படும் என அறிவித்தார். அதாவது, 2022ம் ஆண்டை விட 2023ல் ரூ.69 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
விவசாயம் துறை:
பட்ஜெட்டில், 2023-24ல், வேளாண் துறைக்கு, மொத்தம், 1.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23ம் நிதியாண்டில், 1.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கல்வித்துறை:
2023-24 பொது பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.1,12,899 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்காக மொத்தம் ரூ.1,04,278 கோடி ஒதுக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை:
மத்திய அரசு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட ரூ.723.97 கோடி கூடுதலாக ரூ.3397.32 கோடி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.
சுகாதார துறை:
2023-24ம் ஆண்டில் சுகாதாரத்துறைக்காக பட்ஜெட்டில் ரூ.88,956 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், 2350 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 2.71 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இந்தியாவில் இவ்வளவு இது நிதி பற்றாக்குறையா.... என்ன செய்ய போகிறது அரசாங்கம்?!!