அடுத்த சமந்தாவாக ஸ்கெட்ச் போடும் வீர தமிழச்சி...!!

அடுத்த சமந்தாவாக ஸ்கெட்ச் போடும் வீர தமிழச்சி...!!
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆவதுபோல ஜல்லிக்கட்டு போராட்டத்தில்  ஒரே வீடியோவில் தமிழகம் முழுவதும் பிரபலமான வீர தமிழச்சி ஜூலி அதிலிருந்து அடுத்தகட்டமாக பிக்பாஸ், anchoring, acting என்று வெற்றிபடிக்கட்டில் தாவிக்கொண்டே சென்று இப்பொது சூப்பர் மாடல் ஆகிவிட்டார்.

இவரின் சமீபத்தைய  செயல்பாடுகள், ஒரு வேலை இவரும் முதலமைச்சர் பதவியை இலக்காக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகத்தை இவரின் ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது.

தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் புஷ்பா முதல் இரண்டு நாட்களிலேயே உலகளவில் 100 கோடி வரை வருமானம் எடுத்து அல்லு அர்ஜுன் careerல் மிக முக்கிய படமாக அமைந்துள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் சமந்தாவின் சர்ச்சைக்குள்ளான படலானா ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பாடலை பார்ப்பத்திற்கே திரையரங்கிற்கு கூட்டம் குவிகிறது என்கிறார்கள்.

பட்டிதொட்டி எங்கும் ட்ரெண்ட் ஆகி குழந்தைகள் முதல் பெரியவர் வரை முணுமுணுத்து கொண்டிருக்கும் இந்த பாடலுக்கு பல வகையில் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும், அதையெல்லாம் தாண்டி பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது ஊ சொல்றியா பாடல். இதனால் குஷியான சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், கவர்ச்சி என்பது கடின உழைப்பின் அடுத்தகட்டம் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது இதற்கு முன் அவர் குடும்பத்து பெண்ணாக, நகைச்சுவையாக, குணச்சித்திரமாக, வில்லத்தனமாக, பல கதாபாத்திரங்களில் தனது முழு உழைப்பை கொடுத்து சிறந்த முறையில் நடித்துள்ளார் ஆனால் கவர்ச்சி என்பது இவை அனைத்தையும் விட அதிக உழைப்பை எடுக்கக்கூடியதாய் இருக்கும் என்பது போல கூறியுள்ளார். இவரின் இந்த டீவீட்டிற்கு குஷ்பூ, தமன்னா, மாளவிகா மோகன், அர்ச்சனா, சின்மயி என பலர் ரீடுவீட்டில் பாராட்டியுள்ளனர்.

இப்படி பலரின் பாராட்டுகளை பெற்று வைரலாகிவரும் இந்த பாடலுக்கு இணையத்தில் நிறையபேர் நடனமாடியும், நடித்தும், மீம்ஸ் செய்தும் பதிவிட்டு வரும் வேளையில் வளர்ச்சி நாயகி, புரட்சி கன்னி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜூலியும் தனது பங்கிற்கு ஒரு வீடியோ பதிவை போட்டுள்ளார்.

சமீபகாலமாக ஜூலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வகையான மாடல் ஷூட் புகைப்படங்களை நிறையவே பார்க்கப்படும். அவரின் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக பல வகையில் வித விதமாக புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் குஷிப்படுத்தி வரும் ஜூலி, அதை விட அதிகமாக வெறுப்புகளையும் சம்பாதித்து வருகிறார்.

இந்த உமிழப்படும் வெறுப்பை இன்னும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி வீடியோவை பதிவு செய்து பங்கம் பண்ணியுள்ளார் ஜூலி. சமீபத்தில் காதல் பிரச்சனையில் சிக்கி அசிங்கப்பட்ட ஜூலை சிறிதுகாலம் வெளியில் தலைகாட்ட மாட்டார் என்று நினைத்தவர்கள் வாயை அடைக்கும் பொருட்டு இப்படி செய்துள்ளார் என்று தெரிகிறது.

இதை பார்த்த ஜூலி வெறியர்கள் அந்த விடியோவை status வைத்து share செய்து வேற levelலில் பரப்பி வருகின்றனர். ஆனால் ஜூலியின் heaters "உன்னுடைய அடையாளமாக நீ முன்னெடுத்தது என்ன? தற்போது நீ செய்து கொண்டிருப்பது என்ன?? உன் உருவத்துக்கும் வயதுக்குமான செயலை செய்வதே நல்லது என்றும் சூரி காமெடியில் வருவது போல இந்த செருப்பும் அந்த செருப்பும் ஒண்ணா என்று கேட்டும் இணையத்தில் வச்சி செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com