பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தும் கோரிக்கைகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளான நீட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின், மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார். இதற்காக இன்று காலை 7.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன், அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

டெல்லி தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதிக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்று வரும் திமுக அலுவலக கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இன்று மாலை 5 மணியளவில், பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளான நீட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது