சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்? லிஸ்டில் உள்ள அந்த 3பேர் யார் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் ரவீந்திர ஜடேஜாவை நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்? லிஸ்டில் உள்ள அந்த 3பேர் யார் யார்?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 ஆவது முறையாக கோப்பையை கைப்பறியது . சென்னை அணி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், அதை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கியது சிஎஸ்கே.கடந்தஆண்டு ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதனால் தோனியையும், சென்னை அணியையும் இனி அவ்வளவு தான் என விமர்சனங்கள் குவிந்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்றியதில் இருந்து அணியின் கேப்டனாக தோனி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 வயதாகிவிட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் நடந்தால், அத்துடன் தோனி தன் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.இதனால்  சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விவை ரசிகர்கள் இப்போழுதில்  இருந்தே சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். தோனிக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருந்தாலும் ச ரெய்னாவுக்கு தற்போது 34 வயதாகிறது. எனவே, நீண்ட காலத்துக்கு அவரால் கேப்னாக இருப்பது என்பதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  32 வயதான ரவீந்தர ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அணியில் ஆல்ரவுண்டரான பேட்டிங் பவுலிங் பீல்டிங் என அனைத்திலும் கலக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் தோனி போலவே நெருக்கடியான காலக்கட்டத்தில் அணியை கூலாக வழி நடத்தும் திறமை ஜடேஜாவுக்கு இருப்பதாக சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நினைக்கிறது. நடப்பு தொடரில் சென்னை அணிக்காக சென்னை அணிக்காக ஒரு சதம் 4 அரைசதங்களுடன் மொத்தம் 635 ரன்கள் எடுத்து ஆரஞ்சு நிற தொப்பியை பெற்ற ருதுராஜ் கெய்க்வாடுக்கும் சென்னை அணியின் வருங்கால கேப்டன் லிஸ்டில் இருக்கிறார் என பேச்சும் அடிபட்டுள்ளது. டெல்லி அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் போல இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாடும் கேப்டனாக நியமிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.