யார் இந்த எல் சிசி...மோடிக்கும் அவருக்குமான ஒற்றுமை என்ன?!!

அதிபராவதற்கு முன், எல் சிசி எகிப்திய ராணுவத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றினார். 2014 இல் அவர் எகிப்திய இராணுவத்திலிருந்து ஜெனரல் பதவியுடன் ஓய்வு பெற்றார். 2010 முதல் 2012 வரை ராணுவப் புலனாய்வு இயக்குநராகவும் பணியாற்றினார்.
சிறப்பு விருந்தினர்:
எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி 2023 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கிறார்.
மோடி- எல் சிசி ஒற்றுமை:
சில செயல்களில் பார்க்கும் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கும் எல் சிசிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் 2014ல் ஆட்சிக்கு வந்து அந்தந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்தினர். இரண்டாவது ஆட்சியின் போதும் இரு தலைவர்களும் அறுதிப் பெரும்பான்மை பெற்றனர்.
அல் சிசி பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்...
எகிப்தின் ஆறாவது அதிபர்:
அப்துல் பத்தா எல் சிசி, எகிப்தின் ஆறாவது அதிபரான இவர், 19 நவம்பர் 1954 இல் பிறந்தார். 2014ல் எகிப்தின் அதிபரான எல் சிசி 2018ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். அதற்கு முன்னதாக, 2013 மற்றும் 2014ல் எகிப்தின் துணைப் பிரதமராகவும், 2012-13ல் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அதிபராவதற்கு முன்:
அதிபராவதற்கு முன்னர் எல் சிசி எகிப்திய ராணுவத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றியுள்ளார். 2014 இல் அவர் எகிப்திய இராணுவத்திலிருந்து ஜெனரல் பதவியுடன் ஓய்வு பெற்றார். 2010 முதல் 2012 வரை ராணுவப் புலனாய்வு இயக்குநராகவும் பணியாற்றினார்.
ட்ரம்பின் பாராட்டு:
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பிடமிருந்து பாராட்டையும் பெற்றுள்ளார் எல் சிசி. 2018 ஆம் ஆண்டில், எல் சிசியின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்காக டிரம்ப் ட்ரம்ப் இவரை பாராட்டியுள்ளார். உண்மையில் பார்க்கும் போது எல் சிசி பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு:
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசு தின விழாவில் வெளிநாட்டு விருந்தினர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, இந்த நிகழ்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு விருந்தினர்கள் இல்லாமல் நடைபெற்றது.
2021 ஆம் ஆண்டில், அப்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று அதிகரித்ததால் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: குடியரசு தினவிழா 2023 சிறப்பு விருந்தினர்....வெளியிட்ட வெளியுறவு துறை அமைச்சகம்!!!