சொன்ன வாக்குறுதிய நிறைவேற்றாமா... 100 நாள் கொண்டாட்டம் தேவையா? எல்.முருகன் விமர்சனம்

தேர்தல் வாக்குறுதிகளை கூறுவார்கள் ஆனால் நிறைவேற்றமாட்டர்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகிவிட்டதை மட்டும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் என திமுகவை மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

சொன்ன வாக்குறுதிய நிறைவேற்றாமா... 100 நாள் கொண்டாட்டம் தேவையா? எல்.முருகன் விமர்சனம்

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதற்கு காரணமாக இருந்த நான்கு மாவட்ட தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக கட்சி சார்பில் கார் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.பி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, மாநில பொதுச்செயலாளர் கரு நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் மத்திய அமைச்சர் எல்.முருகன் மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசாக வழங்கினார்.

மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்),நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி),வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), சி.கே.சரஸ்வதி (மொட்டக்குறச்சி) ஆகியோருக்கு உறுதுணையாக இருந்து கடந்த தேர்தலில் வெற்றிப்பெற செய்த நான்கு மாவட்ட தலைவர்களான  1.மகாராஜன் - திருநெல்வேலி, தர்மராஜ் -கன்னியாகுமரி, சிவசுப்பிரமணியம் -ஈரோடு, நந்தக்குமார் -கோவை ஆகியோருக்கு ஊக்குவிக்கும் விதமாக 4 இன்னோவா கார் பரிசாக வழங்கப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை கூறுவார்கள் ஆனால் நிறைவேற்றமாட்டர்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகிவிட்டதை மட்டும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் என திமுகவை மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.