ஒரு குடும்பம் ஆட்சி அமைக்க பொய் வாக்குறுதி கொடுக்க கூடாது... அண்ணாமலை ஆவேசம்  

திமுக பொய் பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்ற தாகவும் மேலும் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது.  பின்னர் மாநில தலைவர் அண்ணாமலை மேடையில் பேசுகையில் ஒரு குடும்பம் ஆட்சி அமைக்க பொய் வாக்குறுதி கொடுக்க கூடாது என தெரிவித்தார். மேலும், மே மாதத்தில் இருந்து கடலுக்கு போகாமல் இருப்பதற்கு 5000 திற்கு பதிலாக 8000 கொடுப்பதாக மாநில அரசு கூறியது, ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் ஆகியும் செய்ய முடியவில்லையா எனவும் கேள்வி எழுப்பினார். மீன் பிடிக்க சென்று மீனவர்கள்  இன்று மீண்டும் கரை திரும்புகிறது என்றால் அதற்கு மோடி அரசு தான் காரணம் என பிரதமர் மோடி அவர்களுக்கு புகழாரம் சூட்டினார். 7 ஆண்டு ஆட்சியில் இதுவரை ஒருவர் கூட இலங்கை அரசால் சுட்டுதள்ள படவில்லை இதுதான் எங்கள் ஆட்சிக்கு சிறப்பு எனவும் கூறினார்.

83 நாட்கள் ஆகியும் பட்ஜெட் தாக்கல் செய்ய வக்கத்த அரசாக மாநில அரசு உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மீனவர்கள் கோரிக்கையை விரைவில் மாநில அரசு நிறைவேற்றாமல் இருந்தால்  முதல்வர் இல்லம் முன்பு அடுத்தக்கட்ட போராட்டம்   நடைபெறும் எனவும் அவர் எச்சரித்தார். ஆர்பாட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் பாஜக நிர்வாகிகள் வாங்குவதில் ஈடுப்பட்டதோடு தரக்குறைவாக பேசினர். திமுகவின் புரோக்கர்களாக பத்திரிகைகள் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com