சேர்ந்து வாழலாம் என அழைத்த தாயின் 2வது கணவர்… ஆசைக்கு இணங்க மறுத்ததால் மகள் குறித்து அவதூறு…

சேர்ந்து வாழலாம் என அழைத்த தாயின் 2வது கணவர்… ஆசைக்கு இணங்க மறுத்ததால் மகள் குறித்து அவதூறு…

மகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தாய் மற்றும் அவருடைய 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர். 
Published on

மகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தாய் மற்றும் அவருடைய 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர். 

சென்னையை அடுத்த அம்பத்தூர் எம்.ஜி.ஆர். புரம் பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி. இவர் 2 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். துர்காதேவி சிறிய வயதாக இருக்கும் போதே அவருடைய தாய் அமுதபிரியா, தந்தை ராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். இதையடுத்து சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடக் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த மாதம் ராஜேஷ், துர்காதேவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நீ தனியாக இருக்க வேண்டாம் என்னுடன் வந்து விடு என்றும், சேர்ந்து வாழலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த துர்காதேவி இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ராஜேஷ் மற்றும் அமுதபிரியாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சமூக வலைதளங்களில் துர்காதேவி பற்றி அவதூறு பரப்பியுள்ளனர். மேலும் அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இது குறித்து துர்காதேவி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷ் மற்றும் அமுதபிரியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com