நீங்கள் சைவமா? வைணவமா? அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய ஆ.ராசா!

எல்லோரும் சமமில்லை என்றால் ஆரியம். எல்லோரும் சமம் என்றால் திராவிடம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று திராவிட இயக்கத்தின் கொள்கையின் படி சேகர் பாபு சட்டத்தை நிறைவேற்றினார்.

நீங்கள் சைவமா? வைணவமா? அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய ஆ.ராசா!

சென்னை புளியந்தோப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும்விழா மற்றும் சமூக நீதி விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேகர் பாபு சைவமா? வைணவமா?

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மேடையில் பேசியதாவது, சேகர்பாபுவை  சைவ சமயம் என்று நினைக்கிறேன் என்று மேடையில் உள்ள சேகர்பாபுவை பார்த்து கேட்டார். ஆனால் இந்து மதப்படி சைவம் என்றால் சிவன் வழிபாடு, வைணவம் என்றால் திருமால் வழிபாடு செய்யவேண்டும். ஆனால் சேகர்பாபு சிவனையும் வணங்குகிறார், திருமாலையும் வணங்குகிறார், பெரியாரியும் பேசுகிறார். இதனால் தான் எல்லோருக்கும் கோபம் வருகிறது. காவி வேட்டி கட்டுகிறார் பட்டை அடித்துக் கொள்கிறார் ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க என கூறுகிறார்  என்பதால் தான் அவர்களுக்கு வயிறு எரிகிறது.

பெண்களுக்கு சொத்துரிமை

பெண்களுக்கான சொத்துரிமை அறிவிக்கப்பட்டது பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின் தன் பிறந்த வீட்டிற்கு செல்லும்போது இரண்டு மூன்று நாட்கள் தங்கிவிட்டு திரும்பி வந்து விடுவாள் அப்போது தயக்கத்துடனையே அவள் அங்கே இருப்பாள்.

ஆனால் இப்போதெல்லாம் அண்ணன் வீட்டிற்கு சென்று பெண்கள் மூன்று நாள் தங்கியிருந்தாலும் அண்ணன் வீட்டில் உள்ளவர்கள் தான் பயம் கொள்கிறார்கள். சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுவாள் என்று பயம் கொள்கிறார்கள். பெண்களுக்காக சொத்துரிமை வேண்டாம் என்று 1951 ஆம் ஆண்டு அம்பேத்கரை சட்டம் நிறைவேற்றவிடாமல் தடுத்தனர். அம்பேத்கரின் கனவை நினைவாக்கியவர் கருணாநிதி.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

எல்லோரும் சமமில்லை என்றால் ஆரியம். எல்லோரும் சமம் என்றால் திராவிடம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று திராவிட இயக்கத்தின் கொள்கையின் படி சேகர் பாபு சட்டத்தை நிறைவேற்றினார். சேகர் பாபு  கூறலாம் எல்லாம் ஆண்டவரின் விதி என்று ஆனால் நாங்கள் சொல்ல முடியாது என்றார். சாதி கோவிலுக்குள் தான் உள்ளது என்று பேசியவர் பெரியார்.

 தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளில் இங்குள்ள மக்களுக்கு திராவிட இயக்கத்தை தவிர நல்லது செய்தது யார்? 50 சதவீத இந்துக்கள் படிக்க கூடாது , பள்ளிக்கூடம் போகக்கூடாது என்ன மூணு சதவீத  இந்துக்களே அதனை தடுத்து நிறுத்தினர். எந்த இஸ்லாமியரும் இந்துக்கள் படிக்க கூடாது என வழக்குப் போடவில்லை என்றார். இன்று முதல் சனாதன இந்து நமக்கு எதிரி. சபிக்கப்பட்ட சாதாரண இந்துக்களுக்கு நாங்கள் தான் எல்லாம்.