நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு...என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு...என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11ஆம் நாள் சென்னையில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிமுகவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்களுக்கு இடையே சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில், வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தில் பந்தல் அமைப்பது, கூட்டத்திற்கு வரும் வாகனங்களை கையாள்வது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, சென்னையில் கோவிட்-19 வைரஸ் பரவல் எனக் கூறி அரசு தடை விதிக்கும் எனில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒருவேளை அதற்கு இடையூறு ஏற்பட்டால் பொதுக்குழுவை இணைய வழியில் நடத்துவது குறித்து திட்டமிட்டு வருதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு நடத்த அரசு அனுமதி அளிக்காத பட்சத்தில் இத்தகைய மாற்று ஏற்பாட்டில் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com