பெண் டாக்டர்கள், நர்சுகளையும் விட்டு வைக்காத மணிகண்டன்... அம்பலமானது அஜால் குஜால் லீலைகள்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பெண் டாக்டர்கள் ,செவிலியர்கள் பாலியல் குற்றச்சாட்டு  அளித்தது வெளிசத்திற்கு வந்துள்ளது.  மருத்துவர் முதல் அமைச்சர் வரை சர்ச்சைகளில் நாயகனாக வலம்  வந்து இருக்கிறார் மணிகண்டன்.
பெண் டாக்டர்கள், நர்சுகளையும் விட்டு வைக்காத மணிகண்டன்... அம்பலமானது அஜால் குஜால் லீலைகள்

நடிகையின் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்கட்சி பூசல் உட்பட சர்ச்சை பேச்சுகளின் நாயகனாகவும் இருந்து வந்தார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் முருகேசன். இவரது மகன் டாக்டர் மணிகண்டன்,  மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். அண்ணா நகரில் மருத்துவமனை நடத்தி வந்தார். தந்தையை போலவே இவருக்கும் அரசியலில் தீவிர ஆர்வம் ஏற்பட்டது.

இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் ஆசியால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவின கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், தேர்தலில் போட்டியிட்டு எதிர்பார விதமான அமைச்சர் ஆனார். பின்னர்  ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது.

2016 செப்.22ல்  உடல்நல குறைவால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த சில வாரங்களில் ஜெயலலிதாவின் உடல் நிலை ராஜ ரகசியம் என கூறி சர்ச்சையில் சிக்கினார். மேலும் ஒரு பொதுகூட்டத்தில் பேசிய மணிகண்டன் அதிமுக கரை வேட்டியை அமமுகவினர் கட்டினால் நடு ரோட்டில் உருவுங்கள். காவல்துறை வழக்குப்பதிவு செய்தால் நான் பார்த்துக்கொள்கிறேன் என பேசி மீண்டும் சிக்கினார்.

அதிகாரிகளை ஒருமையில் மிரட்டும் வகையில் பேசுவது என இவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் கிளம்பிக் கொண்டே இருந்தது. மாவட்ட அதிமுகவினருக்கு ஒதுக்கப்படும் கான்ட்ராக்ட் வேலையை பொதுக்கூட்ட மேடைகளில் பட்டியலிட்டு, யாருக்கெல்லாம் கொடுத்துள்ளேன் எனக்கூறி, அவர்களை மேடையில் எழுந்து நிற்க வைத்து அவமதிப்பு செய்ததாகவும் புகார் உள்ளது.

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்து மணிகண்டன், கலந்து கொள்ளும் விழா மேடைகளில் தன்னை மட்டுமே பெருமையாக பேசி தற்பெருமை அடித்துக்கொள்வார். கேபிள் டிவி தொடர்பாக சக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை பற்றிய அவரது சர்ச்சை பேச்சால், என்று மாலையே அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் பதவியை பறித்து வருவாய்த்துறை அமைச்சராகைருந்த ஆர்.பி.உதயாகுமாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.மேலும் எடப்பாடி ஆட்சியின்போது அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட ஒரே அமைச்சர் என்ற பெருமையும் மணிகண்டனுக்கே சேரும்.

மேலும்  மணிகண்டனின் செயல்பாடு தொடர்ந்து அதிமுகவின் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தவே அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்காமலும். இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் தான் குடியிருக்கும் வீட்டருகே கழிவுநீர் ஓடுவதாக கூறி, வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆளுங்கட்சி எம்எல்ஏவே இப்படி போராட்டத்தில் ஈடுபடுகிறாரே என அதிமுகவினர் இவர் மீது தலைமைக்கு தொடர்ந்து புகார்களை வந்ததை அடுத்து மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லாமல் போனது. 

தற்போது நடிகை சாந்தினி  பாலியல் புகார் அளித்துள்ள நிலையில் அவர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் மீதான பாலியல் புகார்கள் இவர் மருத்துவராக இருந்தபோதே இருந்து உள்ளது. கடந்த 2016க்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக மணிகண்டன் பணியாற்றி வந்தார்.

அப்போது அரசு மருத்துவமனையில் உடன் பணியாற்றும் பெண் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பெண் ஊழியர்களில் சிலர், மணிகண்டன் தங்களிடம் தவறாக நடக்க முயன்றதாக அப்போதைய டீன் சிவக்குமாரிடம் புகார் அளித்தனர். மேலும் அப்போது செவிலியர் சங்கத்தினர் டீன் அலுவலக வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவங்களும் நடந்தன. இதில் பல புகார்கள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் துணை நடிகை  சாந்தினி பாலியல் புகார் ஒன்றை அளித்தார். 5 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த மணிகண்டன் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். அவருடன் இருந்த போது மூன்று முறை கருவுற்றேன். வலுக்கட்டாயமாக கருவை கலைக்கச் செய்தார். இப்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து என்னை மிரட்டுகிறார் என்று கூறினார்.மேலும், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மணிகண்டனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். சாந்தினி அளித்த புகாரின்பேரில் 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com