பாடல் மூலம் இன்றும் வாழும் இந்திய மகள்.... லதா மங்கேஸ்கர் நினைவு தினம்!!!

பாடல் மூலம் இன்றும் வாழும் இந்திய மகள்.... லதா மங்கேஸ்கர் நினைவு தினம்!!!

இந்தியாவோட பழம்பெரும் பாடகிகள பத்தி பேசணும்னா அதுல முதன்மையா நம்ம மைன்ட்க்கு வரவங்கன்னா அது லதா மங்கேஸ்கர் தான்.  கிட்டத்தட்ட எண்பது வருஷமா இசைத்துறைல சாதிச்ச லதா மங்கேஸ்கர் கிட்டத்தட்ட 36 மொழிகள்ல பாடல்கள் பாடி இந்திய ரசிகர்கள் மனசுல நீங்காத இடம் புடிச்சு இருக்காங்க. 

வெளியாகாத முதல் பாடல்:

இந்தியாவோட nightingaleன்னு ரசிகர்கள் செல்லமா கூப்புட்ற லதா மங்கேஸ்கர் பிறந்தது மத்திய பிரதேசம் இந்தூர்ல  1929 செப்டம்பர் 29ம் தேதி.  அவரோட அப்பா மூலமா இசைய கத்துகிட்டவரு ,முதன் முதலா 1942 ல  “கிதி ஹசால்”ன்னு ஒரு மராத்திய பாடல பாடினாங்க.  

ஆனா,அந்த பாடல் வெளியாகாம கைவிடப்பட்டது.  அதற்கு பிறகு மஜ்பூர்ன்ற படம் மூலமா திரைத்துறைக்கு அறிமுகமான லதா மங்கேஸ்கர்  ஹேமந்த் குமார் கய்யாம், ரவி, சலீம் செளத்திரி,சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி,இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான்னு இந்திய சினிமாவின் முன்னணி இசைப்பாளர்கள் எல்லார்கூடவும் வொர்க் பண்ணிருக்காங்க.

தமிழ் முதல் பாடல்:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மேல பெரும் மதிப்பு உள்ளவங்க லதா மங்கேஸ்கர்.  இன்னமும் லதா மங்கேஸ்கரோட சகோதரியான உஷா மங்கேஸ்கர் வரஞ்ச சிவாஜி கணேசனோட ஓவியம், இன்னைக்கு வர சிவாஜியோட அன்னை இல்லத்த அலங்கரிச்சுட்டு இருக்கு.  அவர் மேல உள்ள மதிப்பின் காரணமா சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்புல தமிழ்ல பிரபு நடிச்சு  வெளிவந்த  ஆனந்த் படம் மூலமா  "ஆராரோ ஆராரோ" பாடல பாடிக் கொடுத்தாங்க அதுதான் லதா மங்கேஸ்கர் தமிழ்ல பாடுன முதல் பாடல்.

லதாவைத் தான்:

அதை  தொடர்ந்து  இளையராஜா இசையில கமல் நடிச்சு வெளிவந்த சத்யா படத்துல வர வளையோசை கல கல கல பாடல் மூலமா தமிழ்நாட்டின் பட்டிதொட்டி வரைக்கும் போயி பேசப்பட்டாங்க லதா மங்கேஷ்வர், 70ஸ் கிட்ஸ்ல இருந்து இன்னைக்கு இருக்குற 2kகிட்ஸ் வரைக்கும் அவங்க playlist இந்த பாடல் இடம் பிடிச்சிருக்கும்.  

இந்த பாட்ட வாலி எழுதும்போதே நான் லதாஜிய தான் பாட வைப்பேன்னு கண்டிசன் போட்டு தான் இசை அமைக்கவே செஞ்சாராம் இளையராஜா.  பிறகு என் ஜீவன் பாடுதுங்கிற படத்துல  எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் ன்னு தன்னோட கடைசி தமிழ் பாடல பாடியிருந்தாங்க லதா மங்கேஸ்கர்.  

விருதுகள்:

தமிழ்ல வெறும்  மூன்றே பாடல்கள் பாடிருந்தாலும்  தமிழ் இசை  ரசிகர்கள் மனசுல நீங்காத இடம் புடிச்ச  லதா மங்கேஸ்கருக்கு, 1969ல பத்ம பூசன் விருது, 1999ல பத்ம விபூசன் ,1989 ல தாதாசாஹெப் பால்கே விருதுன்னு பல விருதுகள் கொடுத்து கெளரவிச்ச இந்திய அரசு, 2001-ம் ஆண்டு இந்தியாவோட உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுத்தும் கவுரவிச்சு இருந்தது. 

கின்னஸ்:

தன் வாழ்நாள்ல திருமணமே பண்ணிக்காமா இசைக்காக தன் வாழ்க்கைய அர்ப்பணிச்ச லதா மங்கேஸ்கர் 1974லையே அதிக பாடல்கள் பாடுனதுக்கான கின்னஸ் சாதனைய படைச்சு இருந்தாங்க. அவங்களோட தொண்ணூறாவது வயசுல இந்திய அரசு இந்திய மகள்ன்ற  விருது வழங்கி சிறப்பு செஞ்சாங்க.  

உயிரிழப்பு:

தன்னோட வாழ்நாள்ல ஐம்பதாயிரம் பாடல்கள் கிட்ட பாடுனதா சொல்லப்படுற லதா மங்கேஸ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாசம் கொரானா தொற்றால  பாதிக்கப்பட்டு  பிறகு சிகிச்சை பலனளிக்காம பிப்ரவரி மாசம் 6-ம் தேதி உயிரிழந்தாங்க.  அவங்களோட இறப்பு இசைத்துறைக்கு ஏற்பட்டிருக்குற மாபெரும் இழப்பா இருந்தாலும், இன்னமும் அவரோட பாடல்கள் மூலமா நம்மகிட்ட வாழ்ந்துட்டு தான் இருக்காங்க, இந்தியாவோட nightingale லதா மங்கேஸ்கர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com