அரண்மனைச் சதியும்…அதிமுக வரலாறும்!

அதிமுக தொடங்கியதே ஒரு அரண்மனைச் சதி போலத் தான். 1972ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகதில் மு.கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் இருவருக்குமிடையே ஏற்பட்ட பூசலில் உருவானது தான் அதிமுக.

அரண்மனைச் சதியும்…அதிமுக வரலாறும்!

மன்னராட்சிக் காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற தங்கள் குடும்பத்திற்குள்ளேயே யார் அரசாள்வது என்ற சண்டை நடக்கும். அப்போது அதிகாரத்தை கைப்பற்ற சிலர் சதி செய்து வெல்வார்கள். தற்போது மக்களாட்சி ஏற்பட்டாலும் அது கட்சிகளுக்குள்ளும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

அதிமுக தொடங்கியதே ஒரு அரண்மனைச் சதி போலத் தான். 1972ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகதில் மு.கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் இருவருக்குமிடையே ஏற்பட்ட பூசலில் உருவானது தான் அதிமுக.

1969ஆம் ஆண்டு திமுகவின் நிறுவனரும் அன்றைய முதலமைச்சருமான அண்ணா மறைந்ததையடுத்து கருணாநிதி முதலமைச்சரானார். அதன் பிறகு சில நாட்களிலேயே திமுகவில் கருணாநிதி - எம்.ஜி.ஆர் இடையே யார் தலைமை என்ற  போட்டி நிலவ ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அவர்களிடையேயான மோதல் அதிகரிக்கவே எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.

ஜானகி – ஜெயலலிதா மோதல்…

உடல்நலக் குறைவு காரணமாக 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். அவர் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் யார் அடுத்த தலைமை என்ற போட்டி நிலவியது. ஜெயலலிதாவுக்கு எதிராக அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனை முன்னிறுத்தினர்.

ஜானகியும் குறுகிய காலம் முதலமைச்சராக இருந்தார். அதன் பிறகு அவர் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவே, கட்சி முழுவது ஜெயலலிதாவிடம் சென்றது.

ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக

1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி தனது ஒற்றைத் தலைமையை அதிமுகவில் நிறுவினார். அன்று முதலே சசிகலாவும் அவரது கணவர் ம.நடராஜனும் அதிமுகவின் நிழல் தலைமையாக செயல்பட்டனர்.

ஜெயலலிதாவின் வாங்கிக் குவித்த சொத்துகள் அனைத்தும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தான் பினாமியாக இருந்துள்ளனர்.  இடையிடையே சிறிது கருத்து வேறுபாடு இருந்தாலும் ஜெயலலிதா -சசிகலா இடையேயான நட்பு யாரும் பிரிக்க முடியாததாக இருந்தது.

ஜெயலலிதா மறைவும்..சசிகலா தலைமையில் அதிமுகவும்…

2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுகவின் தலைமையேற்றார். அவர் சிறைக்குச் சென்ற பிறகு அவரால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியே அவரை கைகழுவிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் – பழனிச்சாமி கூட்டணி    

ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் ஐந்து ஆண்டு காலம் இணைந்து செயலாற்றினர். தற்போது அவர்களிடையேயும் யார் தலைமை என்ற போட்டியில் பிளவுபட்டு நிற்கின்றனர். இம்முறையும் அரண்மனைச் சதி செய்து இருவரில் யாராவது தலைவராகலாம்.

இப்படி அதிமுக தொடங்கியதிலிருந்தே அது அரண்மனைச் சதியில் தான் நீடித்து வந்திருக்கிறது.

- ஜோஸ்