சூப்பர் மாடல் மீராமிதுன் V/S ஸ்லீப்பிங் ஸ்டார் அஷ்வின்

சூப்பர் மாடல் மீராமிதுன் V/S ஸ்லீப்பிங் ஸ்டார் அஷ்வின்

ராணுவத்துல அழிஞ்சவங்கள விட ஆணவத்துல அழிஞ்சவங்க தான் அதிகம் அதுவும் தமிழ் சினிமாவில ஆணவத்தால அழிஞ்சவங்க ஆயிரக்கணக்குல இருக்காங்க.

என்னதான் ஆணவம் செருப்பு மாதிரி காலுக்கு கீழ தான் இருக்கனும்னு dialogueலா பேசுனாலும் பிரபலமடைஞ்சி சமூகத்துல நிலை  கொஞ்சம் உயரும்போது தலைல இருக்குற கணமும் உயர்ந்துக்கிட்டே போகுது.

அப்படி ஆணவத்தில் ஆடும் அரைவேக்காடு ஆர்ட்டிஸ்ட் ரெண்டு பெரு சமீபகாலமா சோசியல் மீடியால வச்சி செய்யப்பட்டு வராங்க.

அதுல மொதெல்ல செய்க யாருக்குனு பாத்தீங்கன்னா நெட்டிசன்களால ஸ்லீப்பிங் ஸ்டார்னு அன்போடு அழைக்கப்படும் அகிலவுலக ஆணழகன் அஸ்வின். இவரை தெரியாதவங்க இந்த உலகத்துலயே யாரும் இருக்கமுடியாது. ஒரே வார்த்தை ஓஹோன்னு வாழ்க்கைங்குற மாதிரி குக் வித் கோமாளி என்ற ஒரே ஷோல உலக பெண்களின் கனவு கண்ணனா மாறிட்டாரு.

தலைவன் நின்னா அழகு, நடந்தா அழகு, பாத்தா அழகு, பேசுனா அழகு, அழகோ அழகு.. அழகுக்கெல்லாம் அழகு அப்படினு அவரோட ரசிகைகள் உளறிகொட்டுனத உண்மைன்னு நெனச்சி ஆழ்மனசுல நான் ஒரு ஆணழகன் அப்படினு strongஆ நம்ப ஆரமிச்சிட்டாரு. அவருக்குள்ள அந்த நம்பிக்கை ஒரு fireஆ கொழுந்துவிட்டு எறிஞ்சிட்டு இருக்க நேரத்துல அதுல என்னை ஊத்துற மாதிரி இவரை வச்சி எடுத்த ஆல்பம் song எல்லாம் செம ஹிட் அடிச்சது. 


இசை, ஒளிப்பதிவு, choreography இதெல்லாம் காரணம் இல்ல அஸ்வின் மூஞ்சிக்காக மட்டும்தான் அவ்ளோ பேரு பாத்திருக்காங்க அப்படினு ஊர் முழுக்க பேச, பசில இருந்தவனுக்கு பாயசம் கெடச்ச மாதிரி டைரக்டர் ஆகி தமிழ் சினிமா தலையெழுத்தையே மாத்துறேன் அப்படினு ஊற விட்டு ஓடிவந்து chance தேடி அலைஞ்சிட்டு இருந்த பல assistant directors அஸ்வினோட பாட்டே இப்படி ஓடுதே அப்போ படம் எப்படி ஓடும்னு இவரை வச்சி படம் எடுக்க முடிவுபண்ணி இவருகிட்ட வந்து கதை சொல்லிருக்காங்க.

அந்த கதையெல்லாம் தாலாட்டா நெனச்சி தூங்குன அஸ்வினு ஹரிஹரனோட என்ன சொல்ல போகிறாய் கதையை கேட்டு அலறியடிச்சி எழுந்து அதே வேகத்துல shooting போய் படத்தையும் நடிச்சி முடிச்சிட்டாரு. அந்த படத்தோட audio launchக்கு வந்த அஸ்வின் கதை கேட்டு தூங்குன கதையை ஒளறிக்கொட்ட அத கேட்ட அஸ்வின் haters எல்லாரும் மாட்னடா பம்பரக்கட்டை மண்டையான்னு அவருமேல உள்ள வன்மத்துல மீம்ஸா போட்டு தாளிச்சு எடுத்துட்டாங்க. 

அடடா நம் பிட்டு நமக்கே ரீவிட்டு ஆயிடுச்சேன்னு மனமுடைஞ்சு அஸ்வின் ஒரு formalityக்கு sorry சொல்லி வீடியோவும் வெளிட்டாரு அதப்பாத்த நெட்டிசன்கள் இந்த வீடியோல காட்டுன நடிப்பை கொஞ்சம் படத்துலயும் காட்டினா படம் ஓடும் அத விட்டுட்டு வாயில ஓட்டாதீங்கனு, advice கொடுக்க ஆரமிச்சிட்டாங்க இது என்னடா ஆணழகனுக்கு வந்த சோதனைனு பாத்தா அத விட ஒரு பெரிய சோதனையா அவர் நடிச்ச படத்தையும் தள்ளிப்போட்டு அவரை இன்னும் சோதிக்குறாங்க. 

இந்த கிறிஸ்துமஸ்க்கு வெளியிட இருந்த படத்தை தள்ளிப்போட்ட தயாரிப்பாளர் அடுத்த வருஷம் தான் படம் வெளிவரும்னு சொல்லிட்டாரு. பொங்கலுக்கு வலிமை வருது காதலர் தினத்துக்கு சேதுபதியோட காத்துவாக்குல ரெண்டு காதல் வருது அப்போ என்ன சொல்ல போகிறாய் எப்போ வரும்னு கேட்டா, “வரும் ஆனா வராதுன்னு” சொல்லி அஸ்வினுக்கு ஆப்படிக்குறாங்க ஒரு வேல theaterக்கு வரமா OTTல வரும் அப்படிங்குறதைதான் இப்படி சொல்றாங்களோ என்னமோ. 

பல்லாக்குள ஏறுறதும் வாயால பள்ளு ஒடையுறதும் வாயால. அகிலவுலக ஆணழகன் ஸ்லீப்பிங் ஸ்டார் அஸ்வின் அவரு வாயலா தான் ஏறுன பல்லக்குல இருந்து விழுந்து பள்ள ஒடச்சிக்கிட்டாரு. அஸ்வினாவது பரவலா தெரியாம வாய்விட்டு தான் வாங்கிக்கட்டிக்குனாரு இங்க இன்னொரு பீசு பல்லக்கே ஏறாம பள்ளமட்டும் ஒடச்சிக்கிட்டு இருக்கு ஒரு தடவ இல்ல ரெண்டுதடவ இல்ல போக்கையாவுற வரைக்கும் மொக்க வாங்குறத நிறுத்தமாட்டாங்க போல நம்ம சூப்பர் மாடல் மீரா மிதுன். கங்கா சந்திரமுகியா நின்னா, கங்கா சந்திரமுகியா தன்னை நெஞ்சிகிட்டா, கடைசில கங்கா சந்திரமுகியாவே மாறிட்டானு ரஜினி சொல்ற மாதிரி 

ஒரு முழு பைத்தியமா மாறிட்டாங்க மீரா மிதுன். ஒரு மாடலா தன்னோட தொழில் வாழ்க்கையை தொடங்குன மீராமீதுன் லேடி சூப்பர்ஸ்டாராகி தமிழ்நாட்டோட முதல்வர் ஆகணும் அப்படிங்குற தனது லட்சியத்துக்காக ரொம்பவே கடுமையா ஒழைச்சாங்க. அவங்க எந்த அளவுக்கு கடுமையா ஒழைச்சங்கங்குறத பிக் பாஸ் சீசன் 3 பாத்தாலே தெரியும்.

அந்த அளவுக்கு கடுமையான உழைப்பை போட்டாலும் திரையுலகுல அவங்களுக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கடைசி வரைக்கும் கிடைக்கல. இதுனால மனசு ஒடஞ்சி போன அவங்க பிரபலமாக சிங்க பாதையை தேர்ந்தெடுத்துட்டாங்க. அதோட முதல் படியா பல ரஜினி, கமல், விஜய், சூரிய அப்படினு தமிழ் சினிமா முன்னணி நடிகர்களை பத்தி அவதூறு பேச ஆரமிச்சாங்க இதுனாலே வெகு விரைவில் negative publicity அடைஞ்ச அவங்களோட புகழ் ரொம்ப நாள் நீடிக்குல அதுனாலே இன்னும் பிரபலமாகுற எண்ணத்துல ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பத்தி அவதூறா பேசி தமிழகத்துல ஜாதி கலவரத்தை தூண்ட பாத்தாங்க அதுக்குள்ள இந்த மீரா மிதுனை காவல்துறை கைது பண்ணி உள்ள அடச்சிடிச்சு. சமீபத்துல பெயில்ல வெளிவந்த ஒடனே தன்னோட ரசிகர்களுக்காக பிரத்தேயகமா ஒரு வீடியோவ வெளியிட்டாங்க அதுல தான் முதலமைச்சர் ஆவதை தடுக்க தான் பல அந்நிய சக்திகள் முயற்சி செய்து வருது அதுனாலே என்னோட ரசிகர்கள் அத்தனைபேரும் தனக்கு ஆதரவாளர்களா மாற சொன்னாங்க கூடவே வருங்காலத்துல கர்மாவ குறைச்சி முடிஞ்சா கர்மாவே செய்யாம இருக்க கோரிக்கை வச்சிருந்தாங்க. இதுல கொடுமை என்னனா அவங்கள பின்தொடரவங்க எல்லாம் அவங்கள கலாய்க்க தான் இருக்காங்கனு தெரியாம ரசிகர்கள்னு நம்பிட்டு இருக்காங்க.

தமிழ்நாட்டுல பல பேருக்கு இவங்க நிஜமாவே பைத்தியமா இல்ல பைத்தியம் மாதிரி நடிக்குறாங்களானு தெரியாம கொழம்பிட்டு இருக்காங்க.