மக்களே உஷாரா இருங்க... புதிதாக 24 கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு...

மக்களே உஷாரா  இருங்க... புதிதாக 24 கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு...

சீனாவில் வசிக்கும் வவ்வால்களிடம் இருந்து 24 கொரோனா வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலக முழுவதும் கொரோனா தொற்று ஆட்டிப்படைந்தது வருகிறது. இந்நிலையில் உலகேயே அச்சுறுத்தும் கொரோனா முதலில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது.

இப்படி உலகேயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி  சீனா ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறுகின்றனர்.. அதாவது வவ்வால்களில் இருந்து 24 கொரோனா வைரஸ்களை சேகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த வைரஸ் பல்வேறு விதமாக உருமாறி சில நாடுகளில் பரவி வருகிறது.

கடந்த 2 வருடங்களாக  வவ்வால்கள் மத்தியில் எத்தனை கொரோனா வகைகள் உள்ளன என்பது குறித்தும்,சீனாவில் காடுகளில் வசிக்கும் வவ்வால்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மற்றும் எச்சில்கள் மூலம் மொத்தம் 24 கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாதாகவும், இதில் 4 கொரோனா வைரஸ்கள் தற்போது பரவும் கொரோனா வைரஸ்க்கு ஒத்து இருப்பது தெரிவித்துள்ளனர்.