சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்...

சினிமா பிரபலங்களையும் சர்ச்சையும் பிரிக்கவே முடியாது அந்தளவுக்கு பிரபலமானாலே பிரச்சனையும் தேடிவந்து ஒட்டிக்கும் அப்படி இந்த வருஷம் தலைப்பு செய்திகள்ல வந்த முக்கியபிரபலங்கள் யாரு அப்படி என்ன சர்ச்சைல சிக்குனாங்க அப்படிங்குறத தான் இந்த பட்டியல்ல பாக்கபோறோம்.
சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்...

1. விஜய்:
இளையதளபதில இருந்து தளபதியா promote ஆனதுல இருந்து படம் வரும்போதெல்லாம் கூடவே ஒரு பிரச்னையையும் வந்துடுது ஆனா பொங்கலுக்கு வந்த மாஸ்டர் பிரச்னை பண்ணாம பாத்து பதமா போய்டிச்சி சரி இந்த வருஷம் சிக்கல்ல சிக்காம safeஆயிட்டாரு அப்படினு பாத்தா வெளிநாட்டில இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செஞ்சி அதுக்கு வரி விளக்கு கேட்டு வழக்கு தொடர்ந்தாரு சுல்தானே காஞ்சி போயிருக்க குதிரை கேட்டுச்சாம் குளொப் ஜாமுன்ங்குற மாதிரி மக்கள் கொரோனால செதுக்கிட்டு இருக்காங்க இதுல உனக்கு சொகுசு கார் அதுவும் வரி இல்லாம கேக்குதோன்னு விஜய் hatersலாம் கொந்தளிச்சாங்க. இதுமட்டும் இல்லாம விஜய் மக்கள் இயக்கம் தேர்தல்ல நின்னு ஜெயிச்சது, விஜய் அவங்க அப்பா, அம்மா மேல case குடுத்தது அப்படினு இன்னும் சில சம்பவங்கள்ல மாட்னாரு நம்ம தளபதி.

2. ரஜினிகாந்த்:
வடசென்னை படத்துல கிஷோர் கதையை முடிக்க நம்ம ஆளு ஒருத்தன அவன்கிட்ட அனுப்பனும்னு தனுஷ அனுப்புவாங்க அப்படி தலைவர் மார்க்கெட்டை முடிக்க தலையும் தளபதியும் plan பண்ணி அவங்க ஆளான சிறுத்தை சிவாவையும், AR முருகதாஸையும் அனுப்பி தர்பார், அண்ணாத்தே ரெண்டு சம்பவங்களை செஞ்சி ரஜினிய close பண்ண பாத்தாங்க போதா கொறைக்கு ஒடம்பு சரில்லனு hospitalல admit ஆனவருக்கு operationனு சொல்லி அல்லு கிளப்பி விட்டுட்டாங்க ஆனா நல்லபடியா பொழச்சி வீடு திரும்புன தலைவரு நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ அப்படினு அடுத்த படத்துக்கும் தயாராயிட்டாரு. 

3. கமல் ஹாசன்:
இந்த வருஷம் தேர்தல்ல எதோ ஓரளவுக்காவது வருவாருனு பாத்தா ஒரு ஓரமா பொய் உக்காந்துட்டாரு சரி பொறந்த குழந்தையை ஓட சொல்றது நியாமா அது மொதெல்லா நிக்கட்டும் அப்பறோம் நடக்கட்டும் straightஆ wwe ஆட சொன்ன மூஞ்சி மொகரலாம் உடைய தானே செய்யும் so இதுவும் ஒரு வகைல வெற்றிதான்னு கமல் fansலா மனச தேத்திக்கிட்டாலும் மறைவா போய் மருந்து போட்டுக்க வேண்டியதுதான் போச்சு. இப்படி தேர்தல் timeல பேசு பொருளா ஆணவரு அதுகாப்புறோம் பிக் பாஸ் timeல கொரோனால பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று ஒரே வாரத்துல திரும்பி வந்து திரும்பவும் பேசுபொருளா ஆனாரு.

4. சூர்யா:
இப்போ கொஞ்ச வருஷமா சர்ச்சைக்குரிய நடிகர்கள் பட்டியல்ல  சூர்யா முன்னிலை வகிச்சிட்டு வராரு அவரு படங்களும் சரி அவரு வெளியிடுற கருத்துக்களும் சரி பெரிய விமர்சனக்களுக்கு உள்ளாகுது அப்படி இந்த வருஷம் சூர்யா தயாரிச்சு நடிச்ச படம் ஜெய் பீம் titleலே சர்ச்சையை கிளப்புற மாதிரி இருக்குனு பேசிகிட்டு இருந்த நேரத்துல படம் வெளியாகி இன்னும் பெரிய பிரச்சனையா கிளப்பி விட்டுடுச்சு. ஒரு சின்ன calendar மூளையும  அரசியல்வாதிகள்ல இருந்து அரைகுறை youtubers வரைக்கும் எல்லாரும் பேசவச்சி படத்துக்கு இலவசமா promotion தேடிக்கிட்டாங்க ஜெய் பீம் பட குழு. இப்படி ஒரு ராஜதந்திரத்தை பாத்து பாராட்டாம பலர் சூர்யாவை திட்டிகிட்டும் அடிச்சா ஒரு லட்சம் பரிசுனும் பொலம்பிட்டு இருக்காங்க idea இல்லாத பசங்க. இப்படி free promotionக்கு trendsetterஆ இருந்த சூர்யா இந்தவருஷத்தின் சிக்கலில் சிக்கிய ஸ்டாரா வலம் வந்திட்டு இருக்காரு.

5. விஜய் சேதுபதி:
heatersசே இல்லாத ஒரே நடிகரா வலம் வந்துட்டு இருந்த விஜய் சேதுபதிக்கு சனி ஆரம்பிச்சது avengers டோனி ஸ்டார்க் ரூபத்துல தான் என்னைக்கு அந்த characterக்கு voice குடுத்தாரோ அதுக்கு அப்பறோம் தொடர்ச்சியா இவரை வச்சி செய்ற சம்பவங்களா தான் நடந்துட்டு இருந்திச்சி அதுலயும் இவரு இலங்கை தமிழனோட முத்தையா முரளிதரனோட வாழ்க்கை வரலாறு நடிக்க போறேன்னு சொன்னதுல இருந்து இவர் heatersஓட எண்ணிக்கை கொரோன மாதிரி பல மடங்கு அதிகரிச்சிடுச்சு அப்படி இந்த வருஷம் இவரு மாட்டுன பிரச்சனை என்னனா மொக்க படங்களா கொடுத்தது தான் குக் வித் கோமாளி அஸ்வின் கேட்டு தூங்குன 40 கதையையும் இவரு நடிச்சி குடுத்துருக்காரு அப்படிங்குற அளவுக்கு இவரை வச்சி செஞ்சாங்க அதுக்கும் மேல  ஒரு பங்கமான சம்பவம் பெங்களூர் airportல ஒரு fan ப்ருஸ்லீ styleல பாஞ்சி வந்து இவரை ஒரு ஓதை ஒதச்சது தமிழ்நாடு fullஆ trending ஆச்சு.

6. அஜித் குமார்:
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடுவோம்னு நெனைக்கிற பிரபலங்கள்ல மிக முக்கியமானவருனா  அது தல தான் இல்ல இல்ல "AK"தான் அஜித் குமார் கடந்த சில வருஷங்களாவே எந்த வம்புமும் வேணா அப்படினும் ஓட்டுக்குள்ள ஒளிஞ்சிக்குற ஆமை மாதிரி வீட்டுக்குள்ளையே இருந்துகிட்டு படத்தோட இசைவெளியீட்டு, விழா வெற்றிவிழா, நேர்காணல் அப்படினு எதுக்கும் தலையை காட்டாம இருக்காரு நம்ம தல சாரி "அஜித் குமார்". இந்த வருஷம்னு இல்ல எந்த வருஷம் இவரு பெருசா எந்த சர்சையையும் சிக்கலை ஆனா இவரோட வெறியர்கள் கிரிக்கெட் playersல இருந்து முதல்வர், பிரதமர் வரைக்கும் எல்லார்கிட்டயும் வலிமை படத்தோட update கேட்டு social mediaல trendingலயே இருந்துட்டு வந்தாங்க இதுபத்தாதுனு இருப்பது வருஷமா தலனு கூப்ட்டுட்டு வர ரசிகர்கள் கிட்ட இனிமேல் என்ன தலன்னு கூப்பிட வேணான்னு சொல்லி பலரோட மரியாதையா சம்பாதிச்சிட்டாரு AK  

இதெல்லாம் தான் இந்த வருஷம் பிரச்னை பண்ண இல்ல சர்ச்சைல சிக்குன starsஓட list.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com