சார்லஸ் இவ்வளவு மோசமானவரா? இதில் தற்போது ராஜ மகுடம் வேற!!!

தற்போது மகுடம் சூடியுள்ள பிரிடிஷ் அரசரான மூன்றாம் சார்லசுக்கு, ஒரு மோசமான பின்னணி உள்ளது. இதனால், அவர் பெரிதாக மக்களிடையே வரவேற்புப் பெறவில்லை!!!

சார்லஸ் இவ்வளவு மோசமானவரா? இதில் தற்போது ராஜ மகுடம் வேற!!!

நமது இந்தியா சுதந்திரம் பெற்றது முதல், நாம் சொல்லி பழகிய வார்த்தையான இளவரசர் சார்லஸ் இன்று, பட்டம் சூடி அரசர் மூன்றாம் சார்லசாகி இருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

1497களில் தொடங்கியது இன்றைய பிரிடிஷ் சாம்ராஜ்ஜியம். அரசர் ஏழாம் ஹென்ரி முதல் இன்று பல அரசர்களும், மகாராணிகளும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 1700களில் இங்கிலாந்து, ஸ்காத்லாந்து, அயர்லாந்து ஆகிய பகுதிகள் ஒன்றாக்கப்பட்ட பின் வந்த ஏகாதிபதிகளில், 13வது இடம் பிடித்திருக்கிறார் அரசர் மூன்றாம் சார்லஸ்.

ஆனால், இவருக்கு கிடைத்த பட்டம், மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவரது மோசமான பின்னணி தான் காரணம் என்றும் சொல்லலாம். அவரைச் சுற்றி பல வகையான வதந்திகளும், அவரது வாழ்க்கையில் ஒரு சில கரும்புள்ளிகளும் இருந்தது. அவை என்னவென்று பார்க்கலாமா?

நவம்பர் 14ம் தேதி, 1948ம் ஆண்டு பிறந்தவர் தான் மூன்றாம் சார்லஸ். மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கும், அவரது கணவர் பிலிப்பிற்கு பிறந்த முதல் குழந்தை இவர் என்பதால், அரியணைக்கு அடுத்த வாரிசாக பிறந்ததிலேயே உருவானார். அந்த தலைகணமோ என்னவோ, அவர் மீது பல புகார்கள் சிறு வயதிருந்தே வந்திருக்கிறது.

மேலும் படிக்க | இன்று முதல் இரண்டு பிறந்தநாட்கள் கொண்டாடும் அரசர் சார்லஸ்!!!

Prince Charles and Princess Diana attending a presidential banquet at the Blue House on Nov. 3, 1992, in Seoul, South Korea, on their last official trip together. (Tim Graham Photo Library—Getty Images)

சுட்டித் தனமாக சிருவயதில் பார்க்கப்பட்டது, வயதாக வயதாக, தொல்லையாக தெரிந்தது. அடங்காத தனம், தான் என்ற அகம் என ராஜ பரம்பரையினருக்கு இருக்கும் தவறான நடவடிக்கைகள் இவருக்கு இருந்திருக்கிறது. பின், வெல்ஷ் மொழி பேசும் பிரிடெயினின் நான்காவது பகுதியான வேல்ஸ்-க்கு இளவரசானார். அப்போதில் இருந்து, அவருக்கு பெண்கள் மீது ஆர்வம் அதிகம்.

பிரிடிஷ் நோபிள் குடும்பத்தைச் சேர்ந்த சாரா என்பவரை காதலித்துக் கொண்டிருந்த சார்லஸ், 1977ம் ஆண்டு, அந்நாட்டு பாரம்பரிய விளையாட்டான ‘போலோ’ விளையாடும் போது, 16 வயதான ஒரு பெண் மீது காதல் வயப்பட்டார். அந்த பெண்ணின் சுட்டித் தனம், சுறு சுறுப்பு போன்ற பலவற்றால் கவரப்பட்ட சார்லசுக்கு, அந்த 16 வயது பெண் தான், தான் காதலிக்கும் சாராவின் தங்கை, “டயானா” எனத் தெரியவந்தது.

இதனால், டயானாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முணைப்போடு, தன்னை விட 10 வயதுக்கும் மேல் சிறிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் சார்லஸ். அதுவும், தனது காதலியின் தங்கை என்பது அவர் வாழ்க்கையில் பதிந்த முதல் கரும்புள்ளி. இதனால், அவர் பெண்கள் விஷயத்தில் மோசம் என்ற பெயர் அவருக்கு வந்தது.

மேலும் படிக்க | சார்லஸ் மன்னரான பின்னர் பிரிட்டனில் வரப்போகும் மாற்றங்கள் என்ன?

the Crown' Fans Trolling Prince Charles and Camilla on Social Media

அப்படி திருமணமான பிறகு சந்தோஷமாக இருந்தனரா என்றால் அதுவும் இல்லை!!! தனது மனைவியின் அழகு மீது, தனது மனைவியின் பிரபலத்தையும் இவரால் தாங்கிக் கொள்ல முடியவில்லை. தன்னை விட தனது மனைவி எப்படி இவ்வளவு பிரபலமாக இருப்பதை வெளிப்படையாக காட்டியுள்ளார் சார்லஸ்.

அது மட்டுமின்றி, தனது மனைவியை மிகவும் மோசமாக நடத்தியதைத் தொடர்ந்து, பிரபல நாடக நடிகர் மற்றும் ஆடாழகியான கமீலா என்பவருடன் திருமணத்திற்கு வெளியே தொடர்பில் இருந்தார். பல சர்ச்சைகளை தாண்டி, டயானாவை விவாகரத்தும் செய்தார். விவாகரத்து என்பது பிரிடிஷ் முறைப்படி தகாத ஒரு செயல் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும், மகுடம் சூட்ட தயாராகும் அடுத்த அரசர் விவாகரத்து செய்வது, அந்நாட்டு கிருஸ்துவ சர்ச்சை அவமதிப்பது போலாகும்.

அதையும் தாண்டி, தனது காதலியான கமீலாவை பல எதிர்ப்புகளை தாண்டி திருமணமும் செய்து கொண்டார். தற்போது மகுடம் சூட்டப்பட்ட ஏகாதிபதி, அப்போது, பலருக்கு பதியாக இருந்தது, அந்நாட்டு மக்கள் நன்கு அறிந்ததால் தான் அவர் அரசரானதை பலராலும் ஏற்க முடியவில்லை. 

மேலும் படிக்க | ராணிக்கும் டயனாவிற்கும் இடையே கசப்பான உறவு ஏற்பட்ட காரணம் என்ன??

--- பூஜா ராமகிருஷ்ணன்


5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

சமீபத்தில் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 5 மாநில தேர்தல்கள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் சத்தீஸ்கர் மாநில தேர்தல் மட்டும் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் மிசோரம் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களின் இன்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதன்படி, விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில் இரண்டு மாநிலங்களில் பாஜகவும், ஒரு மாநிலத்தில் காங்கிரஸூம், ஒரு மாநிலத்தில் இழுபறியும் இருந்து வருகிறது.

அந்த வகையில், 199 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தொடர்ந்து  முன்னிலை வகித்து வருகிறது. 1949 முதல் 1977 வரை ராஜஸ்தான் மாநிலத்தை தன் வசம் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, 1977 ல் ஜனதா கட்சியிடம் தோல்வியை தழுவியது. பின்னர் 1980 மீண்டும் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், 1990ல் பாஜகவிடம் தோல்வியை தழுவியது. அதன்பிறகு, காங்கிரஸூம், பாஜகவும் மாறி மாறி ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்து வரும் நிலையில், கடந்த 2018ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில் அசோக் கெலாட் முதலமைச்சராக உள்ளார். 

ராஜஸ்தானில் அதிகம் ஆட்சியை பிடித்த கட்சியாக காங்கிரஸ் இருந்து வரும் நிலையில், இந்த முறையும் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டியது. அதேசமயம், பாஜகவும் ராஜஸ்தானில் ஆட்சியை பிடிப்பதற்காக தீவிர முனைப்பு காட்டி வந்தது.  அதேபோல் பிஎஸ்பியும் தீவிரம் காட்டியது. மும்முனை போட்டி நிலவிய நிலையில், தற்போது வரை 113 இடங்களை கைப்பற்றி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 69 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தையும், பிஎஸ்பி வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. 

ராஜஸ்தானில் காங்கிரஸ் முகமான முதலமைச்சர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும், சச்சின் பைலட் டோன்ங்க் தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் பின்னடைவையே சந்தித்து வருகிறது. 

அதேபோல், பாஜகவின் முகமான முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, ஜல்ராபடன் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் பாஜக ராஜஸ்தானில் வெற்றி பெறும் பட்சத்தில், வசுந்தரா ராஜேவே முதலமைச்சர் தேர்வாகவும்  இருப்பார் என பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.  இவர் கடந்த 2003 மற்றும் 2013 ஆகிய 2 தேர்தல்களிலும் வசுந்தரா ராஜேவே முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், ஆளும் மாநிலத்தில் காங்கிரஸ் பின்னடைவை சந்திப்பதற்கு அக்கட்சியின் உட்கட்சி பூசலே மிக முக்கிய காரணமாக அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் கூகுல் கூறுவதாக கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2014 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு பணியில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக தொடரப்பட்ட  வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவருக்கு  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்ததாக, மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிறை தண்டனை ரத்து...!

இப்படி இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும், செந்தில் பாலாஜி தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர வர்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்ததோடு, மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமின் மனுவை பரிசீலிக்க முடியும் என்று கூறியுள்ளனர். அத்துடன், தற்போது பை பாஸ் சர்ஜரி அப்பண்டிக்ஸ் சிகிச்சை போல சாதாரணமாகிவிட்டது என்றும், Chronic பிரச்சனைகளை மருந்துகளால் தீர்க்க முடியும் என Google கூறுகிறது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமின் மனுவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதால், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமின் மனுவை திரும்ப பெற்று கொண்டது.

வழக்கம்போல், இந்த முறையும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கவில்லை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் உருவச்சிலையை, சென்னை மாநிலக்கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் பிறந்து பிரதமரான ஒருவருக்கு, தமிழ்நாட்டில் சிலை வைப்பது ஏன்? யார் இந்த வி.பி.சிங்? பார்க்கலாம்...

சமூகநீதி மண் என தமிழ்நாட்டை சமீபத்தில் அரசியல் தலைவர்கள் போற்றிவரும் நிலையில், இந்தியாவின் சமூகநீதிக் காவலராக அறியப்பட்டவர் பிரதமர் வி.பி.சிங். வெறும் 11 மாதங்களுக்கு மட்டுமே பிரதமராக பதவி வகித்தபோதும், பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு சட்டம், மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவிகித இடஒதுக்கீடு நிறைவேற்றம், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையம் அமைத்தது என மக்களாட்சி வரலாற்றில் மறக்கமுடியாத பிரதமராக வி.பி.சிங் அறியப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ, எம்பியாக பதவி வகித்து வந்த வி.பி.சிங்கின் பணியைக் கண்டு வியந்த இந்திரா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக 1980ம் ஆண்டு நியமித்தார். வழிப்பறிக் கொள்ளைகளை தடுக்க முடியாமல் தவித்த அவர், தனது பணியை சரிவர செய்யாததால், பதவி விலகுவாக அறிவித்தார். 1984ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக செயல்பட்டபோது, அமலாக்கத்துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கி, வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து நடந்த சோதனையில், சில நிறுவனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நிதி வழங்கும் நிறுவனங்களாக இருந்த நிலையில், ராஜீவ் காந்திக்கு நெருக்கடி ஏற்படவே, நிதித்துறையில் இருந்து பாதுகாப்புத்துறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

அப்போதும் தனது வேட்டையை நிறுத்தாத வி.பி.சிங், ஸ்வீடன் ரேடியோவில் வெளியே கசிந்த போபர்ஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். ராஜீவ்காந்தின் தோல்விக்கு முக்கியப்பங்கு வகித்த இந்த சம்பவத்தை அடுத்து, வி.பி.சிங் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, ஜனமோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கி, திமுக, தெலுங்கு தேசம், ஜனதா கட்சி, மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து, தேசிய முன்னணி கூட்டணியை உருவாக்கவே, 1989ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் 7-வது பிரமராக பொறுப்பேற்றார்.

இதையும் படிக்க : வி.பி.சிங்கின் உருவச்சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்...!

அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றம், ராஜீவ்காந்தியால் அமைதிப்படை என இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தின் மேல் குற்றச்சாட்டுகள் எழவே, அப்படையினரை நாடு திரும்ப வைத்தது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை பட்டியல் வகுப்பைச் சேர்ந்த சட்ட அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வானைக் கொண்டு நிறைவேற்ற முன்னெடுப்பு செய்தது என, அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சென்னையின் உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டியது அவரே.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என நாடு முழுவதும் எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒருவன் சமூக அடிப்படையில்தான் பல்லாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு இருக்கிறான். அதனால், சமூக அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார். அதன்படி, மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றினார். 

இதில் கொடுமையாக, யாருடைய உரிமைக்காக வி.பி.சிங் போராடினாரோ, அதே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வைத்தே போராட்டம் நடைபெற்ற நிலையில், தவறான தூண்டுதலில் உயிர் இழப்பும் ஏற்பட்டது. அதே நேரத்தில், மதக் கலவரத்தைத் தூண்டும் என்ற நோக்கில், தனது ஆட்சிக்கு ஆதரவளித்த போதும் அத்வானியை கைது செய்யுமாறு அப்போதைய பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத்திடம் வி.பி.சிங் கூறினார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அத்வானி மீதான இந்த கைது நடவடிக்கையால் வி.பி.சிங் ஆட்சி மீதான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. 

பின்னர், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வெறும் பதினோறே மாதங்களில் வி.பி.சிங் ஆட்சி கலைக்கப்பட்டது. சமூகநீதிக்காக போராடிய தலைவர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். 

இறுதியாக, அவரது பதவி பறிபோகும்போது, உங்களுடைய கடைசி நாளான இந்த தினத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டபோது, அரசியல் நாட்காட்டியில் கடைசிநாள் என்பதே இல்லை எனக் கூறினார்..

இன்று ஒடுக்கப்படுகிற பிற்படுத்தப்படுகிற மக்களின் பெயருக்கு பின்னால், கல்வி பட்டங்கள் இருக்கிறது என்றால், அதற்கு வி.பி.சிங்கின் பணிகள் முக்கிய காரணம். இப்போது வரப் போகிற சிலையும் சரி, அந்த பெயருக்கு பின்னால் இருக்கும் கல்விப் பட்டங்களும் சரி, அவர் கூறியது போலவே, அரசியல் நாள்காட்டியில் கடைசி நாள் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது...

ரசிகர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், "உலக கோப்பை கிரிக்கெட்" போட்டியின் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்றே சொல்லலாம். முதல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொடங்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில்
இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான்,  இங்கிலாந்து,  நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. 

இந்தப் போட்டி 60 ஓவர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடராக விளையாடப்பட்டது. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் உலக் கோப்பையை கைப்பற்றியது. 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் 2-வது போட்டி 1979-ம் ஆண்டு அதே இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதன் இறுதிப் பேட்டியில், 92 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, 2-வது முறையாக கோப்பையை தக்க வைத்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

அதைத்தொடர்ந்து, 1983-ம் ஆண்டு நடைபெற்ற 3-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீண்டும் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்டது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொண்டது. இதில், 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை, 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. கபில் தேவ் தலைமையில் சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி, சித்து, உள்ளிட்ட வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் தொடர்ந்து 2 ஆண்டுகள் கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி வீழ்த்தியது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. 
 
பிறகு 1987-ம் ஆண்டு நடைபெற்ற 4-வது உலக கோப்பை போட்டியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் இங்கிலாந்து நாட்டில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த உலக கோப்பை போட்டி, முதல் முறையாக இந்திய துணைக்கண்டத்தில் நடத்தப்பட்டது. அத்துடன், அதுவரை 60 ஓவர்கள் கொண்ட போட்டி, 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதில் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டது இங்கிலாந்து அணி.

1992-ம் ஆண்டு நடைபெற்ற 5-வது உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. அதுவரை வெள்ளை நிற உடையில் ஆடிவந்த வீரர்களுக்கு ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு வண்ண உடைகள் வழங்கப்பட்டது இந்த ஆண்டில்தான். சிவப்பு வண்ண பந்து, வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டன. மேலும், பகலிரவு ஆட்டங்கள் என பல்வேறு மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இறுதிப் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில்  இங்கிலாந்து அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது.

1996-ம் ஆண்டு நடைபெற்ற 6-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2-வது முறையாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்றது. பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில், 7 விக்கெட் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இலங்கை அணி கோப்பையை தனதாக்கியது. 

1999-ம் ஆண்டு நடைபெற்ற 7-வது உலக கோப்பை போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. இது ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த 2-வது கோப்பையாகும். 

தொடர்ந்து, 2003-ம் ஆண்டு நடைபெற்ற 8-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்கா நாட்டில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. இது ஆஸ்திரேலியா அணிக்கு கிடைத்த 3-வது கோப்பையாகும். 

2007-ம் ஆண்டு 9-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணி நடத்தியது. இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றது. ஆனால், 53 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இலங்கை அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் இலங்கை அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

2011-ம் ஆம் ஆண்டு நடைபெற்ற 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா மற்றும் பங்களாதேஷ்  நாடுகள் நடத்தின.  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்த இப்போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது. 

எம்.எஸ். தோனி தலைமையில், சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், விராட்கோலி, யுவராஜ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் 91 ரன்கள் அடித்து, ஆட்டமிழக்காமல் இருந்த தோனி, ஆட்ட நாயகன் விருதை பெற்றார். உலகக் கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்கு சமர்பித்த வீரர்கள், சச்சினை தோளில் சுமந்தபடி, மைதானத்தை சுற்றி வந்த காட்சி யாராலும் மறக்க முடியாது. இதன் மூலம் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா...

2015-ம் ஆண்டு நடைபெற்ற 11-வது உலக கோப்பை போட்டியை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் நடத்தின. இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி கோப்பை வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. 

அதனைத்தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நடைபெற்ற 12-வது உலக கோப்பை போட்டியை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து நடத்தியது. இறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இரண்டு  அணிகளும் 241 ரன் எடுத்து ஆட்டம் சமனில் முடிவடைந்ததால், இரண்டு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. அதிலும், இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்து சமன் செய்ததால், அதிக பவுண்டரிகள் அடிப்படையில் 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது. உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, பவுண்டரிகள் அடிப்படையில் கோப்பை வழங்கப்பட்டது 2019-ம் ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது. 

தொடர்ந்து தற்போது, 2023-ம் ஆண்டு நடைபெறும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்தி வருகிறது. இதில், இந்திய அணி லீக் போட்டியில் 9 போட்டிகளிலும், வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. 

இந்தியா, நியூசிலாந்து மோதிய முதல் அரையிறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, 50 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இதில் 177 ரன்களை குவித்த விராட் கோலி, 50-வது சதத்தை அடித்து, சச்சினின் சாதனையை முறியடித்தார். அத்துடன், ஒருநாள் போட்டித் தொடரில், 711 ரன்களை எடுத்து, அதிக ரன்களை குவித்த வீரர் என்ற 2-வது சாதனையையும் படைத்தார் கோலி.  

இப்போட்டியில், நியூசிலாந்து அணி 48 புள்ளி 5 ஓவர்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 327 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் ஷமி  23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மற்றொறு அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, 49 புள்ளி 4 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 212 ரன்களை எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 47 புள்ளி 2 ஓவர்களில், 7 விக்கெட்டுகள்  இழப்பிற்கு, 215 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இன்று நடைபெறும், இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.  

இந்நிலையில் 2011- முதல் 2019-ம் ஆண்டு வரை போட்டி நடத்தும் நாடுகளே வெற்றி பெற்றுவருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு போட்டியை நடத்தும் இந்தியா கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால், ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கோப்பையை நோக்கியே உள்ளது. இதனால், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் விழாக் கோலம் பூண்டுள்ளது என்றால் அது மிகையில்லை. 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார்...? என்ற ஆரவாரத்தில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

65 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல், பலகார மனம் வீசாமல், புத்தாடை அணியாமல் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது எஸ்.மாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை தாய் கிராமமாக கொண்ட இந்த மக்கள், விளாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, அச்சம்பட்டி உள்ளிட்ட 13 கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதே இல்லை என்றால் நம்ப முடிகிறதா ? 

காரணம், 1954-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில், கடன்பட்டு தீபாவளி கொண்டாடியதால், நெல் அறுவடைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், தீபாவளிக்கு பெற்ற கடனை அடைக்க முடியாமலும் விழி பிதுங்கி நின்றுள்ளனர். அன்று இந்த மக்கள் மனோதிடத்துடன் தீர்க்கமான முடிவொன்றை எடுத்துள்ளனர். இனிவரும் காலங்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது இல்லை என்பதுதான் அது.

மேலும், உழைப்பின் உயர்வை உணர்த்தும் உன்னத திருநாளான பொங்கல் பண்டிகையை மட்டும் சீரும்சிறப்புமாக கொண்டாடுவது என ஊர் பெரியவர்கள் அப்போது முடிவெடுத்தனர். அதுநாள் முதல் இந்த கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை புறந்தள்ளி வருகின்றனர். 

இதையும் படிக்க : தீபாவளி எதிரொலி: சிறப்பு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள்...!

இனிவரும் காலங்களில் எவ்வளவு பெரிய நிலைக்கு சென்றாலும், தங்களின் முன்னோர்கள் எதிர்கொண்ட வறுமையின் கொடுமையை மனதில் வைத்து எதார்த்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உறுதியை மனதில் விதைத்துள்ளனர். 

ஒருபுறம் உயர் ரக பட்சணம், சிக்கன் மட்டனுடன் கூடிய சிறப்பு விருந்து, விலை உயர்ந்த ஆடைகள், பட்டாசு என நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறாம். ஆனால், மறுபுறம் இந்த மக்கள் தீபாவளி பண்டிகைக்கான எந்தவித ஆரவாரமின்றி மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 

இன்றைய காலத்திற்கு ஏற்ப வெளிநாடுகளுக்கு சென்றாலும் கூட, ஊர் கட்டுப்பாடு மற்றும் முன்னோர்களின் வாழ்வியலை மனதில் வைத்து, விளைநிலம், வயல்வெளி, விவசாயம், மரம், செடி, கொடி என அனைத்தையும் இளம் தலைமுறையினர் கடைப்பிடித்து வருவது வியப்பிலும் வியப்புதான்...