பிரதமர் மோடியை சுற்றி வளைத்த எதிர்க்கட்சிகள்... கைகோர்த்ததா திமுக...!!

பிரதமர் மோடியை சுற்றி வளைத்த எதிர்க்கட்சிகள்... கைகோர்த்ததா திமுக...!!
Published on
Updated on
2 min read

நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பது குறித்து ஒருமித்த கருத்துள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  விரைவில் அனைத்து தலைவர்களும் இணைந்து அறிக்கை வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடரும் குழப்பம்:

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா தொடர்பாக தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.  மே 28ம் தேதி நடைபெற உள்ள விழாவை பல்வேறு அரசியல் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.   இதில் ஆர்ஜேடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) பெயர்களும் தற்போது புதிதாக இணைந்துள்ளன.  நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பது குறித்து ஒருமித்த கருத்துள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  விரைவில் அனைத்து தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.   

அவமதிக்கும் செயல்:

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது குறித்து கேள்விகள் பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.  குடியர்சு தலைவர் திரௌபதி முர்முவால் கட்டிடத்தை திறப்பதற்கு  பதிலாக பிரதமர் மோடியால் கட்டிடம் திறக்கப்படுவது என்பது குடியரசு தலைவரை அவமதிகும் செயல் என தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதனால்தான், அரசியல் கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக விழாவை புறக்கணித்து வருகின்றன. 

எதிர்க்கும் கட்சிகள்:

ஆர்ஜேடி 
என்சிபி 
திராவிட முன்னேற்றக் கழகம் 
முதலில் கூறியது திரிணாமுல் காங்கிரஸ்
ஆம் ஆத்மி 
இந்திய சிபிஐ 
விடுதலை சிறுத்தைகள் கட்சி

ஆம் ஆத்மி கட்சி:

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைக்காதது, கடும் அவமதிப்பு என கூறியுள்ளார்.  மேலும் இது இந்தியாவின் பட்டியல் இன மக்கள்,பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும் பிரதமர் மோடி சார்பில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி கட்டிட திறப்பு நிகழ்ச்சியை புறக்கணிக்கவுள்ளது என விளக்கமளித்துள்ளார்.

என்சிபி:

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் என்சிபி கலந்து கொள்ளாது என்பது உறுதி எனவும் இதில் ஒருமித்த கருத்துள்ள மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிற்க கட்சி முடிவு செய்துள்ளது எனவும் கட்சி சார்பில் தெரிவிகப்பட்டுள்ளது.

தி.மு.க:

மே 28 அன்று புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க பல எதிர்க்கட்டிகளும் முடிவு செய்துள்ளது எனவும் எனவும் நாமும் அதையே செய்வோம் எனவும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.  அதாவது புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எங்கள் கட்சியும் பங்கேற்காது என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடியை சுற்றி வளைத்த டிஎம்சி:

மே 28ஆம் தேதி நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்கும் என்று மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதிப் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ளார்.  மாநிலங்களவைக்கான டிஎம்சி தலைவர் டெரெக் ஓ பிரையன் அவரது ட்விட்டரில்,  “நாடாளுமன்றம் என்பது வெறும் புதிய கட்டிடம் அல்ல.  இது பழமையான மரபுகள், மதிப்புகள், முன்னுதாரணங்கள் மற்றும் விதிகள் கொண்ட ஒரு அமைப்பு.  இதுதான் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். இதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.  எனவே எங்களை அதிலிருந்து விலக்கிக் கொள்ளுங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

இந்த விழாவில் தங்கள் கட்சி கலந்து கொள்ளாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு ஏன்?:

மே 28 அன்று மதியம் 12 மணிக்கு, பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.  இது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமருக்கு பதிலாக குடியரசு தலைவர் கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என விரும்புகின்றனர். 

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை குடியரசுத் தலைவர்தான் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது.  முர்முவால் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதே ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பு அலங்காரத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் அடையாளமாக இருக்கும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறியுள்ளன.

குடியரசு தலைவரின் நிலைப்பாடு:

இதற்கிடையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோர் பதவியேற்பு விழாவிற்கான வாழ்த்துச் செய்திகளை வெளியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com