இதனால் தான் சமந்தாவுடன் விவாகரத்து ஆனதா... ? நாக சைதன்யா பேட்டி 

இதனால் தான் சமந்தாவுடன் விவாகரத்து ஆனதா... ? நாக சைதன்யா பேட்டி 

தென்னிந்திய திரை உலகில மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளான சூர்யா ஜோதிகாவுக்கு அடுத்து சமந்தா சைதன்யா தான். 2010ல இருந்து காதலிச்சிட்டு இருந்தாங்க, அப்புறம் இவங்களோட கல்யாணம் ரெண்டு குடும்பங்கள் சம்மதத்தோட 2017ல கோலாகலமா ஒட்டுமொத்த திரைத்துறையை திரும்பி பாக்குற மாதிரி நடந்துச்சு. அடடா கல்யாணத்துக்கு அப்பறோம் சாம் நடிக்க மாட்டாங்க போல அப்படினு பலர் வருத்தப்பட்ட நேரத்துல இனிமேல் தான் இந்த காளியோட ஆட்டத்தை பாக்கப்போறங்குற மாதிரி கல்யாணத்துக்கு அப்பறோம் தான் வேற level படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சாங்க சமந்தா. 

பரவால்லபா புருஷன்னா இப்படித்தான் இருக்கனும் மனைவிக்கு கட்டுப்பாடு போடாம அவங்க கனவை தொடர தடையா இல்லாம துணையா இருக்காரே செம மனுஷன்பா அப்படினு ரசிகர்கள் புகழ்ந்துட்டு இருக்க நேரத்துல உள்ளுக்குள்ள புழுங்கிட்டு இருந்திருக்காரு போல சைதன்யா. எது எப்படி இருந்தாலும் சிறப்பா போயிட்டிருந்த சமந்தா வாழ்க்கைல speed breaker வந்த மாதிரி அவங்களோட திருமண பந்தத்தை break பண்ணப்போறோம்னு சொல்லி ரெண்டுபேரும் சேர்ந்து விவாகரத்து அறிவிச்சாங்க. இது பலருக்கு அதிர்ச்சியை அளிச்சாலும் சமந்தா fansக்கு ஆனந்தத்த தான் அளிச்சிருக்கு. 

இந்த பிரபல ஜோடி பிரிஞ்சதுக்கு என்ன காரணமா இருக்கும்னு நாலு பெரு நாலுவிதமா பேசிட்டு இருந்த நேரத்துல அஞ்சாவது ஆளா உள்ள வந்த கங்கனா, அமிர்கான் தான் இதுக்கு முழு காரணம் லால் சிங் சத்தா படத்துல அமிர்கானோட சேர்ந்து நடிச்ச சைதன்ய மனசுல சமந்தா பத்தி நஞ்ச விதைச்சது இந்த நயவஞ்சகர்  தான் இவரு இவங்க வாழ்க்கைல மட்டும் இல்ல பாலிவுட்ல இருக்க பல பிரபலங்கள் வாழ்க்கைல காசு வாங்காத விவாகரத்து வித்வானா செயல்பட்டுக்கிட்டு இருக்காரு அப்படினு ஒரு டுவீட்ட போட்டு சர்ச்சையை கெளப்புனாங்க.  

சரி அவங்க பிரிவுக்கு என்னதான் காரணம்னு அவங்க கிட்டயே கேட்கலாம்னு பாத்தா விவாகரத்து வாங்குன கையோட சமந்தா ஆன்மீக யாத்திரைக்கு நாடுவிட்டு நாடு போய்ட்டாங்க அங்க அப்படியே ஒரு ஹாலிவுட் படத்துலயும் commitஆகி இந்தியா வந்த அவங்க ஒரு பேட்டில நான் என்ன ரொம்ப weakனு நெனச்சேன் ஆனா இப்போ தான் தெரியுது நான் எவ்ளோ strongனு அப்படினு நாம ஒன்னு கேட்டா நம்மள அசரவைக்குற மாதிரி ஒரு பதிலை சொல்லிட்டு escape ஆயிட்டாங்க. 

சரி சமந்தா தான் எதுவும் சொல்லல சைதன்யா என்ன சொல்றாருனு கேட்டா அவரோட படங்களோட வெற்றியை கொண்டடிட்டு இருக்க அவருக்கு மத்த விஷியத்தை பத்தி சிந்திக்க time இல்லனு சொல்லிட்டாரு ஆனா அது கூடவே சமந்தாவை குத்திக்காட்டுற மாதிரி "எல்லா வகையான கதாபாத்திரங்களையும் நான் ஏற்பேன். ஆனா, அந்த character என்னோட குடும்பத்து நல்ல பேருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. என்னோட குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் எந்த characterலையும் நான் நடிக்க மாட்டேன்" அப்படினு சொல்லிருக்காரு.

இதுக்கு முன்னாடி வரைக்கும், சமந்தாவுக்கு குழந்தை பெத்துக்கறதுல விருப்பம் இல்ல ஒரு தடவை கருவை வேற கலைச்சிட்டாங்க அதுனால தான் ரெண்டு பேருக்கும் விவாகரத்து ஆச்சுன்னு தகவல் பரவிட்டு வந்த வேலையில நாகசைதன்யா இப்படி openஆ சமந்தாவை குத்திக்காட்டி பேசி இருக்கறது இவங்க சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2, இந்த மாதிரியான சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களா தேர்ந்தெடுத்து நடிகர்துதான் இவங்க பிரிவுக்கு காரணம்னு தெரியவருது . இதுபத்தாதுனு இப்போ வெளியான புஷ்பா படத்துல வந்த ஊ சொல்றியா மாமா பாட்டு வேற பிரச்சனைய கெளப்புச்சு கூடவே சமந்தா commit ஆயிருக்க  ஹாலிவுட் படத்துல வேற bisexualஆ அதாவது ஆண் பெண் அப்டினு இருபாலின ஈர்ப்பு கொண்ட கதாபாத்திரத்துல நடிக்க  போறாங்கங்கன்னு தகவல் வருது இதெல்லாம் தான் கணவன் மனைவிக்குள்ள கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அப்படினு சமூக வலைத்தளங்கள்ல கருத்து பரவிக்கிட்டு வருது.