எம்.ஜி.ஆர் இல்லை என்றால் அண்ணாவை யாருக்கும் தெரியாது...செல்லூர் ராஜூ பேசியது உண்மையா?

ஒன்றரைக் கோடி மக்கள் அண்ணாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர் இல்லை என்றால் அண்ணாவை யாருக்கும் தெரியாது...செல்லூர் ராஜூ பேசியது உண்மையா?

அதிமுக சார்பில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தினமணி திரையரங்கம் பகுதியில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சம உரிமையை நடைமுறைப்படுத்தியவர்

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் செல்லூர் ராஜூவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், தொடர்ந்து பெண்கள் மேடையில் உட்கார தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மட்டுமே காரணம். தமிழகத்தில் பெண்களுக்கு சமஉ ரிமை, சமத்துவத்தை நடைமுறைப்படுத்தியது அறிஞர் அண்ணாவும், பெரியாரும்.

எம்.ஜி.ஆர் இல்லையென்றால் அண்ணாவை தெரியாது

எம்ஜிஆர் கட்சி தொடங்கமால் இருந்திருந்தால் அண்ணா இருந்தார் வரலாறு படைத்தார் என சாதனைகள் செய்தார் என தெரியாது. எம்ஜிஆர் திமுகவுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். திமுகவை வளர்த்தவர். திமுகவில் எம்ஜிஆர் சேர்ந்த பிறகு தான் அந்தக்கட்சியின் கொள்கைகளை படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் மக்கள் மத்தியில் பரப்பினார். எம்ஜிஆர் சுடப்பட்டதால் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர். சாதாரண நபரான கலைஞரை தலைவராக கொண்டு வந்தது எம்ஜிஆர். தன்னை திமுக தலைவராக்க வேண்டும் என எம்ஜிஆரின் வீட்டில் சந்தித்து பேசியவர் கலைஞர்.

மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசுக்கு சரியான பதிலடியை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் திமுகவுக்கு எதிராக திரும்பி விட்டார்கள். தக்க பதிலடி கொடுக்க தயாராகி விட்டனர்.

செல்லூர் ராஜூ பேசியது உண்மையா?

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொழிப் போராட்டம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காங்கிரஸ் தோற்க காரணமாக இருக்க செல்லூர் ராஜூ இவ்வாறு பேசியிருப்பது பல்வேறு விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. அண்ணா இறந்த போது கூடிய மக்கள் கூட்டம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது. ஒன்றரைக் கோடி மக்கள் அண்ணாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர் இறந்த போது அண்ணாவுக்கு கூடிய கூட்டத்தில் 10ல் ஒரு பங்கு கூட கூடவில்லை.  அப்படி இருக்கையில் உண்மையான மக்கள் செல்வாக்கு படைத்தவர் யார் என்பது எளிதில் தெரிந்துவிடும். செல்லூர் ராஜு எம்.ஜி.ஆர் தான் அண்ணா பிரபலமடையக் காரணம் எனக் கூறுவது நகைப்பிற்குரியதாக தான் பார்க்கப்படுகிறது.