அதிமுக ஓருங்கிணைப்பாளராகிறாரா எடப்பாடி!! நான் எப்பவுமே நம்பர் 2 தானா? ஆதரவாளர்களிடம் குமுறி அழும் ஓபிஎஸ்.!

அதிமுக ஓருங்கிணைப்பாளராகிறாரா எடப்பாடி!! நான் எப்பவுமே நம்பர் 2 தானா? ஆதரவாளர்களிடம் குமுறி அழும் ஓபிஎஸ்.!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராகி பின் எடப்பாடி முதல்வராகி, கட்சி இரண்டாக உடைந்து பின் மீண்டும் ஒன்றுசென்று தற்போது சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஆட்சியையும் இழந்துவிட்டது அதிமுக. ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை கட்சியில் நடக்கும் உள்கட்சி மோதல் மட்டும் முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டே செல்கிறது. 

அதிமுக இணைப்புக்கு பிறகு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பெற்ற பன்னீர்செல்வத்துக்கு அதன் பின் நடந்தது எல்லாம் இறங்குமுகம் தான். கட்சியில் போராடி தன் மகனை மட்டும் எம்.பியாக்கி விட்டார். ஆனால் இதற்கு எதிர்பதமாக எடப்பாடிக்கு எல்லாமே ஏறுமுகம் தான். அதிமுகவில் பத்தோடு பதினொன்றாக இருந்தவர் தற்போது அதிமுகவில் முதன்மை இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். 

தேர்தலுக்கு முன் பன்னீரோடு மறைமுகமாக சண்டை போட்டு முதல்வர் வேட்பாளரான எடப்பாடி. தேர்தலுக்கு பின் நேரடியாக சண்டை போட்டு எதிர்க்கட்சி தலைவரானார். அவர்களிடையே நடந்த இந்த மோதலானது மெரினாவில் மக்கள் முன் பட்டவர்த்தமாக வெளிப்பட்டது.  அதிமுக இரண்டாக பிரிந்து பின் இணைந்த போது பன்னீரின் ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவியை அவர் பெற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் தன்னை ஆதரித்தவர்களுக்கு முக்கிய பதவிகள் கொடுத்து கட்சியில் தன்னை வலிமை படுத்திக்கொண்டார்.

மேலும் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைகள் அனைத்தும் எடப்பாடியை ஆதரிக்க தென் மண்டலமோ பன்னீர் ஆதரவு, எடப்பாடி ஆதரவு என பிரிந்து நிற்கிறது. இந்நிலையில் தற்போது இரட்டை தலைமையாக இருக்கும் அதிமுகவை ஒற்றை தலைமையாக்க எடப்பாடி முடிவெடுத்திருப்பது பன்னீர் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

அதிமுகவில் எந்த மாற்றம் செய்யவேண்டும் என்றாலும் அது அதிமுக பொதுக்குழுவை கூட்டி அதை வைத்து தான் எந்த மாற்றமும் செய்யமுடியும். எனவே அடுத்தமுறை பொதுக்குழுவை கூட்டி பன்னீர் செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கி அந்த இடத்துக்கு தன்னை கொண்டுவர திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி.

எனவே இந்த மாற்றத்துக்காக பொதுக்குழுவில் தனது ஆதரவை அதிகரிக்க தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து செய்து பொதுக்குழு உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தகவலை அறிந்த பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களிடம் இந்த பதவியும் போய் விடுமா? ஆட்சியில் தான் இரண்டாம் இடம் என்றால் இனி கட்சியிலும் இரண்டாம் இடமா என்று புலம்பி வருவதாக கூறப்படுகிறது.