நடிகைகளை ஐந்து வருடமாக சீரழித்த மூன்று மு.அமைச்சர்கள் ஒரு எம்.பி.! விசாரணையில் இறங்கும் திமுக.! 

நடிகைகளை ஐந்து வருடமாக சீரழித்த மூன்று மு.அமைச்சர்கள் ஒரு எம்.பி.! விசாரணையில் இறங்கும் திமுக.! 

மாஜிக்கள் மீதான புகார்கள் தூசி தட்டி எடுக்கும் முயற்சியிலும் திமுக இறங்கிவிட்டது.. இதற்காக அதிகாரிகள் டீமையும் உள்ளே கொண்டு வந்ததுடன், பாலியல் புகார்கள் தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் திரட்டும் முயற்சியிலும் இறங்கி விட்டது. 

ஆட்சிக்கு வரும் முன்பே அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பின் அது தொடர்பான ஆதாரங்களை திரட்டிவரும் நிலையில் அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்கள்  தானாகவே வந்துகொண்டிருக்கிறதாம் திமுகவுக்கு.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகார் தமிழகத்தையே திரும்பிப்பார்க்கவைத்த நிலையில், சாந்தினியை யாரென்றே தெரியாது என மணிகண்டன் கூற,  தன் வீட்டுக்கு அவர் வந்த வீடீயோவை வெளியிட்டு மணிகண்டனின் வாயை அடைத்தார் சாந்தினி. அப்போது காணாமல் போன மணிகண்டனை இப்போது வரை காணவில்லையாம்.இந்நிலையில் அதிமுகவின் மூன்று மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீதும், ஒரு முன்னாள் எம்.பி மீதும் பாலியல் புகார்கள் வரிசை கட்டுகின்றன.


அந்த நான்கு பேரில் இரண்டு அமைச்சர்கள் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மேற்குமாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அதோடு அந்த ஒரு எம்.  பி மத்திய மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். பொதுவாகவே அரசியல் வட்டத்துக்கும் சினிமா வட்டத்துக்கும்  நெருங்கிய தொடர்பு உண்டு. அதன்படி இவர்கள் நடிகைகள் விவகாரத்தில் சிக்கியது மட்டுமல்லாது உதவுகேட்டு வந்த பெண்களிடமும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. மேலும் மார்க்கெட் இல்லாத நடிகைகளிடமும் நெருக்கமாக இருந்துள்ளார்கள். 

ஆட்சியில் இருக்கும் போது அவர்களிடம் நெருங்கி பழகிய அமைச்சர்கள் ஆட்சியை இழந்ததும் அந்த பெண்களை கண்டுகொள்ளாமல் விட்டதாகவும், இதனால் சம்மந்தப்பட்ட பெண்கள் சாந்தினியை போல வழக்கறிஞர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் மீது புகார் அளிக்க தயாராகி வருவதாகவும் கிசுகிசு கிளம்பியுள்ளது. 


மேலும் அந்த மத்திய மாவட்ட முன்னாள் எம்.பி மீதான புகார் காவல்நிலையம் வரை சென்றதாகவும், அதன்பின் அந்த முன்னாள் எம்.பி தலையிட்டு அந்த பெண்ணிடம் பேசியதாகவும் சொல்லப்பட்ட நிலையில் அந்த பெண் மீண்டும் புகார் அளிக்க முன்வந்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆக,இப்போது இருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிக்கப்போவது ஊழல் குற்றச்சாட்டிலா அல்லது பாலியல் குற்றசாட்டிலா என்பது என்பது தான் அரசியல் அரங்கில் எழுப்பப்படும் கேள்விக்குறி.!