4,5 வருசத்துக்கு வெளியவே வர முடியாமல் ஜெயிலுக்குள் முடங்கப்போகும் கிஷோர் கே சாமி,..அடுத்தடுத்து பாயப்போகும் வழக்குகள்..! 

 4,5 வருசத்துக்கு வெளியவே வர முடியாமல் ஜெயிலுக்குள் முடங்கப்போகும் கிஷோர் கே சாமி,..அடுத்தடுத்து பாயப்போகும் வழக்குகள்..! 

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி மீது திமுக கடும் கோவத்தில் இருப்பதால் இன்னும் 5 ஆண்டுகளுக்கு அவர் சிறையில் இருப்பது உறுதி என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக பாஜக ஆதரவாளரும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து பதிவிடுபவருமான கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியதாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. மேலும்  இந்த வழக்கிற்காக கடந்த முறையே கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார் கிஷோர் கே சாமி. இந்த வழக்கின் போதே நீதிமன்றம் அவரது பேச்சை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர சினிமா பிரபலங்களையும், முக்கிய அரசியல் தலைவர்களைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் எப்படியும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாகப் பேசியதாக மத்திய குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் 16 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அதன்பின் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் ஜாமின் கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் கிஷோர் கே சாமி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவருக்கு எதிராக பலர் புகார் கொடுத்து வருகிறார்கள். இதனால் அவரை குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கிஷோர் கே சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. அதன் நகலும் சிறைத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவர்மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளதால் அவருக்கு இனி ஜாமின் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்கிறார்கள் சட்டநிபுணர்கள். இந்த சட்டத்தின் மூலம  ஒரு வருடமாவது அவர் சிறையில் இருப்பது உறுதி என்றும். குறைந்த பட்சம் 3 மாதங்கள் அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். 

அதோடு திமுக தலைமை அவர் மேல் கடும் அதிருப்தியில் இருக்கிறது என்றும், ஆகவே அவர் வெளியே வரும் சூழல் வந்தாலும் புதிய புதிய வழக்குகள் அவர் மேல் பதிந்து குறைந்தது நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அவரை வெளியவே வரவிடாமல் சிறையிலேயே வைக்க முடிவு செய்துள்ளதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. இது பற்றி திமுக தரப்பில் பேசியபோது கிஷோர் கே சாமி மீது வழக்குக்காக பஞ்சம், ட்விட்டர் கணக்கை எடுத்தால் அவரது ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு வழக்கு போடலாம் என்று சிரித்தபடி கூறிச்சென்றார்.