கிஷோர் கே சாமி.., பப்ஜி மதன், சிவசங்கர் பாபா!! கிரிமினல்களோட லிஸ்டில் மாரிதாஸ்!!

கிஷோர் கே சாமி.., பப்ஜி மதன், சிவசங்கர் பாபா!! கிரிமினல்களோட லிஸ்டில் மாரிதாஸ்!!

முன்னெப்போதும் இல்லாத அளவு கூட்டமாக சிக்கிவருகிறார்கள் தலைவர்களையும், பிரபலங்களையும், பெண்களையும்  ஆபாசமாகபேசிவருபவர்கள். அதுமட்டுமல்லாமல் இப்படி பேசும் இவர்களை  வெளிப்படையாக ஆதரிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது என்னும் போது சமூகத்தின் அவலநிலையை என்ன சொல்வது.? 

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக பாஜக ஆதரவாளரும் சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்து பதிவிடுபவருமான கிஷோர் கே சாமியை கைது செய்தது காவல்துறை. இவர் மீது ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியதாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. 

அது தவிர சினிமா பிரபலங்களையும், முக்கிய அரசியல் தலைவர்களைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் எப்படியும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பின் மாதவரத்தில் உள்ள நீதிபதி வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தப்படுத்தினர். அங்கு பத்ரிக்கையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் முன்ஜாமீன் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே கண்டித்தும் கிஷோர் கே சாமி திருந்தவில்லை என்றும் ,பெண்கள் குறித்து அவரது பதிவுகள் கேவலமான எண்ணம் கொண்டவை என்றும், பெண்களைப் பற்றி குரூரமான, கேவலமான பதிவுகளை கிஷோர் கே சாமி பதிவிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட நீதிபதி, பெண்கள் குறித்த கிஷோர் கே சாமியின் பதிவுகள் அவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது என ஆவேசமாக குறிப்பிட்டார். நீதிபதியே வெறுத்துப்போய் இந்த வார்த்தைகளை சொல்லும் அளவு அத்தனை கீழ்த்தரமாக இருக்கிறது கிஷோர் கே சாமியின் பதிவுகள். 


இதே போல பப்ஜி போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டின் நுணுக்கங்களை தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரலை செய்து பிரபலமானவர் யூ-டியூபர் மதன். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடுவதுதான் இவர் யூ-டியூப் சேனலின் ஸ்பெஷாலிட்டி. இவருக்கு யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் மொத்தமாக 9.5 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். கொச்சையான மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் பெண்கள் குறித்து பேசுவதை எதிர்த்து கேட்போரையும் அதே பாணியில் வசைபாடி வருகிறார் யூ-டியூபர் மதன்.

இந்த நிலையில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தரக்குறைவான வார்த்தைகளால் ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டு வீடியோக்களை யூ-டியூபர் மதன் வெளியிட்டு வருவது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. மேலும் தன்னிடம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பேசும் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் இவர் மேல் புகார் எழுந்தது. இவரின் இந்த குற்றச்செயல்கள் அனைத்துக்கும் இவரது மனைவியும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்னும் தகவல் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்களாவது வெளிப்படையாக நாங்கள் இப்படி தான் என்று செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் சிலர் ஆன்மிகம், கல்வி சேவை, மக்கள் நலம் என்ற பொய்களை அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். நித்தியானந்தா, பிரேமானந்தா, பாதிரியார்கள் என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இந்த பட்டியலில் தற்போது இணைத்திருப்பவர் தான் கிருஷ்ணரின் அவதாரம் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் சிவசங்கர் பாபா. 

கேளம்பாக்கத்தில் இருக்கும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா என்பவர் அவரது பள்ளியில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெளிவந்துள்ளது. அதிலும் அவரது இந்த நோக்கங்களுக்கு ஆசிரியர்களே வெளிப்படையாக உதவியுள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் ஏழை, விதவை தாயின் பிள்ளைகள், பயந்த சுபாவம் கொண்ட பெண்களிடமே தனது பாலியல் லீலைகளை அரங்கேற்றியுள்ளார். 

படிப்பு என்ற பெயரில் பள்ளிக்கூடத்தை நடத்திவிட்டு அதில் இத்தனை கீழ்த்தரமான செயல்களை தொடர்ந்து செய்துவந்துள்ளார் இந்த பாபா. இந்த தகவல் வெளிவந்ததும் நித்தியானந்தா பாணியில் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்று கடைசியில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதில் தன்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் இருக்க மொட்டை வேறு அடித்துள்ளார். 

இதைப் பற்றி பேசும் பலர், இவர்களைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள், சினிமா நபர்களை அவதூறாகப் பேசும் மாரிதாஸை கைதுசெய்யவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். . 

மாரிதாஸ்  என்பவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருபவர். இவர் அந்த தலைவர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிவருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தலைவர்கள் பற்றிய தவறான தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தவிர விவசாயிகள் மருத்துவர்களை அவதூறாகப் பேசினார் என்று சொல்லி இவருக்கு எதிராக போராட்டங்கள் கூட நடைபெற்றது.  இந்நிலையில் தனது அவதூறு பேச்சிகளுக்காக கூடியவிரைவில் மாரிதாஸ் கைதுசெய்யப்படுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.