மகாராஷ்டிராவில் ஜுலை 4 நம்பிக்கை வாக்கெடுப்பு...ஷிண்டேவின் நிலைமை என்னவாகும்?

மகாராஷ்டிராவில் ஜுலை 4 நம்பிக்கை வாக்கெடுப்பு...ஷிண்டேவின் நிலைமை என்னவாகும்?

ஒவ்வொரு நாளும் மகாரஷ்டிர அரசியலில் பெரும் திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏவான ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உத்தவ் தாக்கரே சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஜூலை 11 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்தச் சூழலில் நாளை சபாநாயகர் முன்மொழியப்பட்டு ஜூலை 3 அன்று சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஜூலை 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஷிண்டே பக்கம் நிற்பார்களா அல்லது கடைசி நேரத்தில் காலை வாரி விடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

- ஜோஸ்