முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  பெங்களூரில் கைது
Published on
Updated on
1 min read

துணை நடிகை பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்ளூரில் கைது.

நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் சாந்தினி. இவர் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த ஒரு புகார் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக் கூறி உடல் உறவு வைத்து கொண்டதாகவும் மேலும் 5 வருடங்கள் கணவன் மனைவி போல சேர்ந்து

சென்னையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், இதனால் 3 முறை , கருகலைப்பு செய்தாகவும் குற்றம்சாட்டி இருந்தார். தற்போது தன்னை திருமணம் செய்ய மறுத்து, அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது

துணை நடிகை அளித்த புகாரில்,  அடையாறு அனைத்து மகளிர் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட  நிலையில், நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு தெரியாது என்று  மணிகண்டன்  தெரிவித்திருந்தார்.

விசாரணையை தீவிர படித்திய போலீசார் தனிப்படை அமைத்து மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டினர். இதனை கண்டு அஞ்சிய முன்னால் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார். மணிகண்டன் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்த நிலையில்,பெங்களூரில் பதுங்கியிருந்த முன்னால் அமைச்சர் மணிகண்டனை  தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com