"என்னம்மா ஏய்..." மாரிமுத்து காலமானர்! 

"என்னம்மா ஏய்..." மாரிமுத்து காலமானர்! 

திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் மாரிமுத்து காலமானர்.

சமீப காலமாக திரைப்பட வில்லன்களை தாண்டி ஒரு சீரியல் வில்லன் புகழ்பெற்று வந்தார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். என்னம்மா ஏய் எனும் இவரின் அதட்டும் குரல் பழமை தட்டிப்போன ஆணாதிக்கத்தின் குரலாய் அதிரவைத்தது. சீரியலே பார்க்கும் பழக்கம் இல்லாத பலர் இந்த சீரியலுக்கு அடிமையாகவே மாறிப்போயினர். 

இவர் பேசிய வசனங்கள் வீடியோக்களாகவும் ஷார்ட்ஸ்களாகவும் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. 2011ல் வெளிவந்த யுத்தம் செய் திரைப்படத்தில் நடிப்பை தொடங்கிய இவர், பரியேறும் பெருமாள், எமன், கடைக்குட்டி சிங்கம், கொம்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தொடக்கத்தில் வைரமுத்துவின் உதவியாளராக சினிமாத்துறையில் பயணத்தை தொடங்கிய இவர், சீமான் எஸ்ஜே சூர்யா மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களிடம் துணை இயக்குநாக பணியாற்றினார். பின்னர் கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சமீபத்தில் இவர் துணை வில்லனாக நடத்து வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. கமலஹாசனின் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தொலைக்காட்சித் தாெடருக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு வந்து உயிரிழந்தார். இவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வரசநாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com