எம்.ஜி.ஆர் கொடுத்த செங்கோல்...எடப்பாடி பழனிச்சாமிக்கா?

எம்.ஜி.ஆர் கொடுத்த செங்கோல்...எடப்பாடி பழனிச்சாமிக்கா?

அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுப்பெற்று எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராகலாம் என்னும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் ஒருவருடன் செங்கோலை பிடித்துக் கொண்டிருக்கும் காணொளி தற்போது அதிகமாக பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அக்காணொளியில் ஜெயலலிதா ஒரு செங்கோலை எம்.ஜி.ஆருக்கு வழங்குகிறார். அதைப் பெற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர் அதைத் தன்னுடன் சேர்ந்து பிடித்துக் கொள்வதற்கு ஒரு தொண்டரை அழைக்கிறார். அப்படி அழைக்கப்பட்ட தொண்டர் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி எனக் கூறுகிறார்கள் ஒரு சிலர்.எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அது பழனிச்சாமி தான் என அந்தக் காணொளியை சமூக வலைதளங்களில் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுகவை தன்வசப்படுத்த நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இது போன்ற பரப்புரைகள் அவரது கரத்தை வலுப்படுத்தவே செய்யும்.

உண்மை நிலை என்னவென்றால் அக்காணொளியில் இருப்பது எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அது அப்போதிருந்த அதிமுக நிர்வாகி யாரோ ஒருவர் எனக் கூறப்படுகிறது. அவரின் பெயர் என்ன்வென்று இதுவரை அறியப்படவில்லை.

அந்தக் காணொளியில் இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என பரப்பப்பட்ட செய்தி தான் மக்களிடம் அதிகமாக போய்ச் சேர்ந்திருக்கும். அது பழனிச்சாமி இல்லை என்ற செய்தி போய்ச் சேருவது குறைவு தான். ஜூலை 11 ஆம் நாள் அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள நிலையில் இந்தக் காணொளி அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.