தத்தெடுத்தால் ஓய்வூதியம் இல்லையா....சட்டம் கூறுவதென்ன?!!

தத்தெடுத்தால் ஓய்வூதியம் இல்லையா....சட்டம் கூறுவதென்ன?!!

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956 இன் பிரிவுகள் 8 மற்றும் 12 ஆகியவை மைனர் மற்றும் நல்ல மனநிலையுடன் இருக்கும் குழந்தையை தத்தெடுக்க இந்து பெண்ணை அனுமதிக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வழக்கு:

அரசு ஊழியராக இருந்த ஸ்ரீதர் சிமுர்கர் 1993 இல் ஓய்வு பெற்றார்.  ஓய்வு பெற்ற அவர் 1994 ஆம் ஆண்டு இறந்தார்.  இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் அவரது மனைவி மாயா மோட்கரே சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராம் ஸ்ரீதர் சிமுர்கரை அவரது தத்து மகனாக ஏற்றுக்கொண்டார்.  அதன் பிறகு இருவரும் ஸ்ரீதர் சிமுர்கரின் வீட்டின் வசித்து வந்தனர்.  இந்நிலையில் ஏப்ரல் 1998 இல், மாயா மோட்கரே சந்திர பிரகாஷ் என்பவரை மணந்து, அவருடன் புது தில்லியின் ஜனக்புரியில் வசிக்கத் தொடங்கினார்.

நிராகரிப்பு:

தனித்து விடப்பட்ட ஸ்ரீ ராம் ஸ்ரீதர் சிமூர்கர் இறந்த அரசு ஊழியர் ஸ்ரீதர் சிமுர்கரின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி கடிதம் எழுதினார்.  அரசு ஊழியர் இறந்த பிறகு, அவரது மனைவியால் தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது எனக் கூறி, மேல்முறையீட்டாளரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

மேல்முறையீடு:

இந்த தீர்ப்பை தொடர்ந்து ஸ்ரீ ராம் ஸ்ரீதர் சிமூர்கர்உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசு ஊழியரின் மனைவி கணவர் இறந்த பிறகு குழந்தையை தத்தெடுத்தால், அந்தக் குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தத்தெடுக்கும் உரிமை:

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956 இன் பிரிவுகள் 8 மற்றும் 12 ஆகியவை மைனர் மற்றும் நல்ல மனநிலையுடன் இருக்கும் குழந்தையை தத்தெடுக்க இந்து பெண்ணை அனுமதிக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சட்டம் கூறுவதென்ன:

நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் நீதிபதி பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 30, 2015 தேதியிட்ட பம்பாய் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.  உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதி 54(14)(பி) மற்றும் 1972ன் சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகளின் கீழ் குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என்று கூறியது.  அரசு ஊழியர் அவரது வாழ்நாளில் அவரால் சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட மகன்கள் மற்றும் மகள்களுக்கு மட்டுமே குடும்ப ஓய்வூதியத்தின் பலன்கள் வரையறுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com