பல பெண்களை சீரழித்த எனது அப்பா... அவரோடு தினமும் உங்களுக்கு என்ன தொடர்பு? தாமரையை கிழிக்கும் விஜயலட்சுமி மகள்

தாமரையை கிழித்தெடுத்த விஜய்லெட்சுமியின் மகள்!!

பல பெண்களை சீரழித்த எனது அப்பா... அவரோடு தினமும் உங்களுக்கு என்ன தொடர்பு? தாமரையை கிழிக்கும் விஜயலட்சுமி மகள்
கவிஞர்  தாமரைக்கு Noyyal-இன் கடிதம்... 
கவிஞர் தாமரை அவர்களுக்கு, 
நான் விஜயலட்சுமியின் மகள் நொய்யல் எழுதுகிறேன். எனது அம்மாவைப்  பற்றி தொடர் குற்றச்சாட்டுகளைப்பொது வெளியில் பார்க்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. இன்று நான்  18 வயது நிரம்பிய   பெண். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். 
எனக்கு   7 வயது, எனது தங்கைக்கு   4 ½ வயது இருக்கும் போது நாங்கள் என் அம்மாவுடன் சென்னைக்கு வந்து இறங்கினோம்.   ஏதும் புரியா வயதில் அம்மா மட்டுமே  உலகம். அம்மாவுக்கு நிறைய உடல் காயங்களுடன் தான்  வந்திறங்கினோம். அப்போது    பாரதி மாமாதான் முதலில் எங்களை அரவணைத்து ஐயா வருவார்    காத்திருங்கள் எனச்       சொன்னார். அப்போதுதான் நான் தியாகு தாத்தாவை  முதன் முதலில் பார்த்தேன். எங்கள்   இருவரையும் மடியில் வைத்துக் கொண்டு தான் தாத்தா பேசினார்.  
 
எங்களுக்குக் கல்வி,  உடை , இருக்க இடம்  கொடுத்து, அம்மாவுக்கு வேலையும் ஏற்பாடு செய்து தந்து அடைக்கலம்  கொடுத்தது தாத்தா மட்டுமே. ஆனால் எங்களால் ஓர் இடத்தில்    முழுமையாக  10 நாட்கள் கூட தங்கி இருக்க முடியாது. எப்போதும் ஒரு பயத்திலே   அம்மாவின் முந்தானையை பிடித்தபடிதான்  இருப்போம்.  காரணம் எங்களை அப்பா தன் ஆட்களுடன்   தேடி வந்துவிடுவார். நாங்கள் ஒளிந்தே வாழ்ந்திருக்கும் நிலை. நிறைய  வீட்டில் இரவை மட்டும் கழித்திருக்கிறோம். தங்கை இரவில் பாலுக்கு  அழுவாள் என பால்பாட்டிலுடன் தான்  இடம் மாறிச் செல்வோம். 
 
எங்கள் அப்பாவிற்கு ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் திருமணம்  ஆகியிருந்தது. அது தெரியாமல் எனது அம்மாவை படிக்கும் போதே  அதுவும்   16 வயது முழுமையடையாத போதே குழந்தைத் திருமணத்தை  நடத்தி வைத்திருக்கிறார்கள் என் தாத்தா பாட்டி..! இன்று என் தாத்தா உயிருடன் இல்லை. அவரை நான் பார்த்தது இல்லை.     
 
நான் பிறக்கும் போதே என் அம்மா விவரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்ததாக உறவினர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.    அம்மா பட்ட துன்பங்கள் சொல்லி மாளாதவை  .. அதையெல்லாம்  கடந்த ஊரடங்கு காலத்தில்  எங்கள் அப்பா வீட்டில் நாங்களே அனுபவித்தோம். எங்களையே அப்பாவின் அம்மா,  அத்தை, அத்தை மகன் என  அனைவரும் படுத்திய கொடுமை அளவில்லாதது. என் அம்மாவை என்ன என்ன செய்து இருப்பார்கள் என    எங்களால் முழுமையாக உணர்ந்து, புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது எங்கள் அப்பா மூன்றாவதாக செல்வி என்ற பெண்ணுடன் உறவில் உள்ளார்.   அவர் எங்களை அங்கிருந்து துரத்துவதிலேயே குறியாக இருந்தார்.  அப்பாவின் முதல் மனைவி. மூன்றாவது மனைவி  இருவரும் எங்களை வைத்து சண்டை   போட்டு சொத்தை   எழுதித் தரச் சொல்வதுமாக இருந்தார்கள்.
 
 உங்க அம்மா  ஓடிப் போனவள் நீங்களும் ஓடிப் போய்விடுவீர்கள் என எனது அப்பா குடித்துவிட்டு வந்து கத்துவார். அம்மாவிடம் போனில் பேசவிடாமல் சண்டை போட்டுத் தடுப்பார். இரவு 2 மணிவரை இது நடக்கும். கடந்த ஆண்டு  இரவு முழுவதும் அழுது கொண்டே நானும், என் தங்கையும் தூங்கியுள்ளோம். காலையில் எங்களால் எழும்ப முடியாமல் போனால் அப்பாவின் அம்மா பேசியே  சாவடிப்பார்கள்… இன்னும் கொஞ்ச நாள் அங்கு இருந்திருந்தால் நானும் என் தங்கையும் சொத்துக்காக  கொலை செய்யப்பட்டிருப்போம். அம்மா மீண்டும் சண்டை போட்டு எங்களைத் தன் பக்கமே  வைத்துக் கொண்டார். இப்போது பெரும் நிம்மதி.
 
ஆனால்   என் அப்பா  வேறு வழியில்   எங்களைத் தொல்லை செய்யத் தொடங்கிவிட்டார். எப்படி என் அம்மா  எங்களுக்கு பீஸ் கட்டுவாள் பார்க்கிறேன் என   என்னிடம்  போனில் சவால் விட்ட வாய்ஸ் ரெக்கார்டு என்னிடம் உள்ளது. 
 
நாங்கள் தோட்டத்தில் அப்பாவுடன் ஊரடங்கில் இருந்த போது உங்களுடன்   போனில் பேசச் சொல்லி அப்பா எங்களை வற்புறுத்தியுள்ளார். அவர் மிகவும் நல்லவர். குறிப்பாக உத்தமி, உங்க அம்மா போல் பிட்ச் இல்லை என அவர் சொல்ல என் தங்கை கோபமாகப் பேச அவளை அடித்தார்.  
 
என் அப்பா  ஒரு போன் கூடப் பயன்படுத்தத் தெரியாத  சாதாரண ஒரு கிராமத்து ஆள். அவருக்குத் தெரிந்தது எல்லாம் சாராயம் காய்ச்சுவது. ஒரு  10 ஆயிரம் கையில் கொடுத்தால் குடித்தே அழிப்பது. பெண்கள் சவகாசம் அதிகம். நானும் என் தங்கையுமே சாட்சி!ஆனால் பிரபல பாடலாசிரியருடன்    போனில் தினமும் பேசும் அளவுக்கு  என் அப்பா சண்முக சுந்தரம் ஒன்றும்   பெரிய  செலிபிரட்டி இல்லை.   முதலில்  2012  இலிருந்து   என் அப்பாவுடன் நீங்கள் போனில் பேசுவதன்   நோக்கம் என்ன?  ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் என் அப்பாவுக்கும்  பிரபல பாடலாசிரியரான உங்களுக்கும் என்ன தொடர்பு? தாமரை அவர்கள் தனியாகக் குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டபடுவதாக என் அப்பா என்னிடம் கண்ணீர் விட்டுப் பேசினார். 
 
நீங்கள்  கஷ்டப்பட்டதாகச் சொல்கிறீர்கள். ஆனால் என் அம்மாவை இந்த ஊடகத்தில் நீங்கள் எவ்வளவு அசிங்கப்படுத்தியிருக்கிறீர்கள். எத்தனை ஊடகங்களிலிருந்து வேலையை விட்டு தூக்கச் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும் நாங்கள் பட்ட கஷ்டத்தை யாரிடம் போய்ச் சொல்ல..?   என் அம்மாவாக வந்து   பாலியல்  புகார் அளித்ததாகக் கூறியிருக்கிறீர்கள்.. அதுவும் எங்கள் தாத்தா மீது.  நீங்கள் தான்  என் அம்மா, என் பெரியம்மா வாழ்க்கை முதற்கொண்டு அழித்தீர்கள்..  இன்றும் என் பெரியம்மா குடும்பத்தை விட்டு உங்களால் பிரிந்து வாழ்கிறார். குறிப்பாக  10 மாதம்  சுமந்து பெற்ற குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். 
உங்களால் இன்று 5 பெண்கள் வாழ்வு  நிம்மதி இழந்து கிடக்கிறது.   
இதனால் உடலளவிலும் பல்வேறு பிரச்சனைகளை  இந்த இளம் வயதிலும் சந்திக்கிறோம். என் அப்பாவுக்கு  எனது அம்மாவின் முகநூல் போட்டோ அனைத்தையும் எடுத்து பிரிண்ட் போட்டு அனுப்புவது உங்கள் வேலை.    உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி,  என் அம்மாவின் செல்போன் ரெக்கார்டு பண்ணுவது, அவர் எங்கு செல்கிறார்,  அவர் நடவடிக்கையை தனியார் டிடெக்டிவ் வைத்துச்   சேகரிப்பது..   எவ்வளவு டார்ச்சர் கொடுத்து இருக்கிறீர்கள்.  .. இந்த மன உளைச்சலை எங்கு போய்ப் பேசுவது. இவற்றை எந்த  வன்முறையில் சேர்ப்பது. 
 
உங்களைப் பார்க்க என் அம்மா, பெரியம்மா வந்தார்கள். நீங்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்தி   அம்மாவை ஊடக வேலையிலிருந்து வெளியேற்றச் செய்வதும், தொடர்ந்து அம்மாவைப் பல்வேறு வகையில் கண்காணிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தத் தொடர் டார்ச்சர் பொறுக்க முடியாமல்தான் அம்மாவும் பெரியம்மாவும் வந்தார்கள். நேரில் பேசி பிரச்சனையை சரி செய்ய வந்த என் அம்மாவிடம் நீ பாவம், உங்களை  அவர் பாசம் காண்பித்து ஏமாற்றிவிட்டார். அப்பா  இல்லை என்றால்  இப்படித் தான் பெண்கள் வாழ்க்கை ஆகும் எனக் கூறி அப்படியே  என் பெரியம்மாவை உங்கள் வலையில் சிக்க வைத்து, நாளை வாருங்கள் எல்லாப் பெரியவர்களை வைத்துப் பேசி உன்னை இந்த பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறேன் என் என் அம்மாவிடமும் நீயும் பெங்களூரு சென்று உன் கணவனுடன் நிம்மதியாக வாழலாம் என பெரியம்மாவிடமும் கூறினீர்கள். இந்தப் பிரச்சனைகளில் அம்மாவுக்குத் துணை நின்றதால் பெரியம்மாவுக்கும் பிரச்சனை இருந்தது. உங்கள் டார்ச்சர் தாங்க முடியாமல்தான் உங்களிடமே இருவரும் வந்தார்கள். வந்தவர்களிடம் இப்படியெல்லாம் பேசி நம்பிக்கை அளித்து  வரச் சொன்னீர்கள்.
அதனை  நம்பி வந்தவர்களுக்கு நீங்கள் செய்தது என்ன? நடந்தது என்ன?   உங்கள்  பக்கம் இருக்கும் பத்திரிக்கையாளர்,  எழுத்தாளர்,  பெண்ணியப் போராளி, ஆவணபட இயக்குனர்,  ஈழவிடுதலைக்காக குரல் கொடுப்பவர் என்கிற அடையாளங்களைக் கொண்ட ஒரு சிலரை அங்கே வர வைத்திருந்தீர்கள். இவர்களும் உடன் சேர்ந்து நீங்களும் எப்படி எல்லாம்   என் அம்மாவைக் கேள்வி கேட்டீர்கள்.  கிராமத்தில் இருந்து வந்த பெண்  இப்படியெல்லாம் எப்படி உடை அணியலாம்,    மூன்றாம் மனிதரான தியாகுவை ( தாத்தாவை) எப்படி   அப்பா என்று அழைக்கலாம் என்றெல்லாம் கேட்டீர்கள். அதில் ஒரு பத்திரிக்கையாளர்  என் அம்மாவுக்கு தெரியாமல்     போனில் ஒளிப்பதிவு செய்து , அதை நீங்கள்    வலைதளத்தில் உலவவிட்டீர்கள்…  இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்.
 
என் அம்மா கொலைக் குற்றம் செய்தது போல  இந்தப் பொதுச் சமூகம் பல வகையில் பேசிச் சிரித்தது.. உங்களுக்கு என்ன  ?  நீங்கள் செலிபிரெட்டி…  நீங்கள் பாட்டு எழுதி சம்பாதிக்கும் நிலையில் இல்லை. ஆனால்  நாங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்துள்ளோம். மாதச் சம்பளம்  5 ஆம் தேதி காலியாகி,  மாதம் முழுவதும் படும் கஷ்டம் எஙகளுக்கு மட்டும்தான் தெரியும்.. 
 
நீங்க பேசற முற்போக்குப் போலியானது. நானும் எனது தங்கையும்   சிறுவயதிலிருந்தே பொதுவாழ்வகத்தில் வளர்ந்தவர்கள். உங்களைப் போல, கேளிக்கை கூத்துக்குத் துணை போனவர்கள் இல்லை. சிறு வயதிலிருந்தே மக்கள் பிரச்சனைகளைப் பார்த்து, போராடி வளர்ந்தவர்கள்.   பொது வாழ்வகம் எங்களை அப்படித்தான் வளர்தெடுத்து இருக்கிறது. 
 
சுதா அக்காவின் பதிவைப் பார்த்து இதை எழுதுகிறேன்..  ஒரு  தனி மனித  உரிமையை மீறி , உங்களுக்கு இருக்கிற பணக்கார எலைட்  பெண்ணியத்தை வைத்து  மீண்டும் மீண்டும் என் அம்மாவின் புகைப்படங்களை தவறாக  பயன்படுத்திக் கொண்டு   இருக்கிறீர்கள்.  நானும்  அமைதியாக கடந்து போலாம் என்றால் நீங்களே அதற்கு வழிவிடுவதில்லை.  உங்களுடைய   நடவடிக்கை உங்களையே அம்பலப்பட வைக்கிறது. 
 
 இப்போது சொல்லுங்கள்.. என் அப்பாவோடு உங்களுக்கு என்ன தொடர்பு ? நீங்கள் ஏன் என் அப்பாவிடம் போனில் பேச வேண்டும்?  என் அப்பாவும் என் அம்மாவும்    பிரிந்து இருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சனை?  இன்றும் என் அம்மா எழுப்பாத பிரச்சனைகளை உங்கள் வன்மம் தீர்த்துக் கொள்ள முன்வைத்து வருகிறீர்கள்? என் அம்மா எங்களுக்குத் தாத்தாவாக தியாகு தாத்தாவைத்தான் எங்களுக்குச் சொல்லி வளர்த்தார். அந்த உணர்வோடுதான் இன்றும் உள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
 
பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த எனது அப்பா ஒரு  சமூக விரோதி… சாராயம் காய்ச்சிவிற்பது, லாரியை திருடி   கோவை உக்கடம் கொண்டு   உடைத்து விற்பது, போலீஸுக்கு இன்ஃபார்மராக இருப்பது.  ஸ்பிரிட் கடத்தி விற்பது என சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யும் அவருடன் நீங்கள் தினமும் அப்டேட் செய்வது ஏன்?  இன்னும்  காவல்நிலையங்களில் ரிக்கார்டு உள்ளது. நானே சாட்சி..
 
மனித உரிமை பேசும் நீங்கள், பொது வெளியில் என் அம்மாவின்  புகைப்படங்களையும் மறைமுகமாக அம்மாவையுமே தவறாகப் பயன்படுத்துவதன் நோக்கம்?   இது தான் உங்கள் பெண்ணுரிமைச் செயல்பாடா?  பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது  இதுதானா?.
பேச்சுவார்த்தைக்கு வந்த பெண்ணை தெரியாமல் வீடியோ எடுத்து ,  எடிட் செய்து வெளியிடுவதுதான் உங்கள் மனித உரிமையா? அப்போது   இருந்த உங்கள் ஆதரவாளர்கள் ஏன் இப்போது பேசவில்லை?  அன்று உங்களோடு நின்ற அவர்கள் எல்லாம்   என் அம்மாவிடம் பிறகு மன்னிப்புக் கேட்டதை  ஏன் உங்களுக்கு அவர்கள் சொல்லவில்லையா?  பத்து வருட வலி.. எனது கேள்விகள் தொடரும் என முடித்துள்ளார்.