ஜாதகம் பார்த்து நாள் குறித்த ஜோதிடர்... பதவியேற்பு தேதி விஷயத்திலும் ரங்கசாமியை கடுப்பாக்கும் பாஜக!!

ஜாதகம் பார்த்து நாள் குறித்த ஜோதிடர்... பதவியேற்பு தேதி விஷயத்திலும் ரங்கசாமியை கடுப்பாக்கும் பாஜக!!

தேஜ கூட்டணியில் பாஜக, அதிமுக மற்றும் என்ஆர் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இதில், பாஜக ஆறு இடங்களிலும், என் ஆர் காங்கிரஸ் பத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. 

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும் மே 7ஆம் தேதி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து எம்.எல்.ஏ,கள் மற்றும் நியமன எம்.எல்.ஏ,கள் கடந்த 26 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்தனர். 

பாஜக தரப்பில் துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு முதல்வர் ரங்கசாமி மறுப்பு தெரிவித்ததால், 2 முக்கிய அமைச்சரவை பதவி, சபாநாயகர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதற்கு ரங்கசாமி ஒப்புக்கொண்டதால் பாஜகவை சேர்ந்த செல்வம் சபாநாயகராகப் பொறுப்பேற்றார். 

அதைத் தொடர்ந்து முதல்வர் பதவி உட்பட ஆறு அமைச்சர்களில் பாஜகவுக்கு இரண்டு அமைச்சர், சபாநாயகர் பதவி, என்ஆர் காங்கிரஸுக்கு முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள், என நீண்ட பேச்சுவார்த்தை, போராட்டங்களுக்குப் பிறகு இரு கட்சியினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது

புதுவை முதல்வர் ரங்கசாமியின் சோதிட நம்பிக்கை தான். அதன்படி தங்கள் கட்சியில் வெற்றிபெற்றவர்களில் யார் சிறந்த நிர்வாகி, மூத்தவர் என்று பார்க்காமல் அவர்கள் ஜாதகத்தை வைத்தே யார் அமைச்சர்கள் என்று பார்த்து வருகிறார். அமைச்சர் பதவிக்கு யார் ஜாதகம் சரியாக இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே தேர்வு செய்வார். அதன் படியே தற்போது தன் கட்சி அமைச்சர்களை தேர்வும் செய்துள்ளார்.  

அமைச்சர்கள் பொறுப்பேற்க பாஜக தரப்பில்  நாள் நட்சத்திரம் பார்த்து, ‘21ஆம் தேதியை’ முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த தேதியில் அமைச்சரவை பதவியேற்பு நடந்தால் முதல்வர் பதவியை பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் ஆக்கிரமிப்பு செய்துவிடுவார் ஆகவே, உங்கள் ராசிக்கு ’ஜூன் 24’ தான் சிறந்த தேதி என்று ரங்கசாமியின் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். அதனால் அந்த நாளில் (இன்று) அமைச்சர்கள் பொறுப்பேர்ப்பார்கள் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கூற அதற்கு ஆளுநர் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் உற்சாகம் அடைந்த பாஜக தரப்பு  மீண்டும் ஜோதிடம் பார்த்து, ’ஜூன் 27ஆம் தேதியை’ குறித்துக் கொடுத்துள்ளார்,அந்த தேதியைத் தான், துணை நிலை ஆளுநர் தமிழிசையும் முடிவு செய்துள்ளதாகச் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரங்கசாமி அப்செட்டில் இருக்கிறாராம்.