ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே இல்லை...எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே இல்லை...எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக தனக்கு எழுதிய கடிதம் ஏற்புடையதல்ல என்று, .பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் எழுதியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக காரசாரமாக கருத்து மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.அதில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்துப் போடத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு இன்று எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல என பதிலளித்துள்ளார்.கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? என்றும், உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக தனக்கு எழுதிய கடிதம் ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி,

பொதுக்குழுவில் சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

 செய்தித் தொகுப்பு: ஜோஸ்

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com