அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Published on
Updated on
1 min read

அதிமுக அலுவலகம் அருகே பதற்றமான சூழல் நிலவக்கூடும் என்பதால் 150 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் பணியில் உள்ளவர்கள் மாற்றப்படுவார்கள். ஆகவே மொத்தம் 450 காவலர்கள் அதிமுக அலுவலக பாதுகாப்பு பணிக்கென ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11 அன்று சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் நடைபெற்றது. அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இதனால் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையினரால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 11ம் தேதி, வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுகவினர் தீர்மானங்கள் நிறைவேற்றினர். மேலும், கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதாக கூறியதால், தொண்டர்களிடையே பதற்றமான சூழல் காணப்பட்டது. 

அதிமுக தலைமை அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீல் அகற்றக் கோரி இ.பிஎஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வர உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com