இலங்கையின் அதிபராக விருப்பம் தெரிவித்த பிரேமதாசா......

இலங்கையின் அதிபராக விருப்பம் தெரிவித்த பிரேமதாசா......

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதும், அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதிபர் ராஜபக்சே பதவி விலகல்:

பிரேமதாசாவின் சமகி ஜன பலவேகயா கட்சி இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற  பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.

அதிபர் ராஜபக்சே இந்த வாரம் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற சபாநாயகர் ஜூலை 20 அன்று அடுத்த அதிபர் சட்டமியற்றுபவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் என்று அறிவித்திருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் இருப்பதன் காரணமாக பிரேமதாச அதிபராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பிரேமதாசா அறிவிப்பு:

அதிபர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டால், ஜனாதிபதி பதவிக்கு  வேட்புமனுவை வைக்க வேண்டும் என்று அவரது கட்சியும் கூட்டாளிகளும் ஒப்புக்கொண்டதாக பிரேமதாசா தனியார் செய்தி நிறுவனத்திடம் அறிவித்திருந்தார்.

2019 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பிரேமதாசா  வெற்றிபெற ஆளும் கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்க விகிதம்  55 சதவீதத்தை எட்டியது. மேலும் மில்லியன் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை உருவாக்கவும் போராடி கொண்டிருக்கிறார்கள்.  எஸ்ஜேபி கட்சி இடைக்கால அரசாங்கத்தில் பங்கு கொள்ளத் தயாராக இருப்பதாகவும்  பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

குழப்பம், நிச்சயமற்ற தன்மை மற்றும் முழுமையான அராஜகம் என்று இலங்கையின் தற்போதைய நிலைமையை  விவரித்த பிரேமதாச அதற்கு ஒருமித்த கருத்து, ஆலோசனை, சமரசம் மற்றும் ஒன்றிணைதல் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை 2019 ஆம் ஆண்டு இருந்த நிலைக்குத் திரும்பவும் கொண்டுவர ஏறக்குறைய நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகள் எடுக்கும் எனவும் நெருக்கடியைச் சமாளிக்க அவருடைய கட்சிக்கு பொருளாதாரத் திட்டம் இருப்பதாகவும் பிரமதேசா கூறியுள்ளார்.

மேலும் அதிபர் மாளிகைக்குள் இப்போது மக்கள் நிறைந்துள்ளனர் எனவும் திவாலாகிவிட்ட ஒரு நாட்டில் அன்றாட வாழ்க்கை நிலையை பார்க்கும் போது இதயம் நொறுங்குகிறது எனவும் மக்களை ஏமாற்றப் போவதில்லை எனவும் வெளிப்படையாக இருப்போம் எனவும் இலங்கையை பொருளாதார சீர்கேடுகளிலிருந்து விடுபடுவதற்கான திட்டத்தை முன்வைப்போம் என்று பிரேமதாசா கூறியுள்ளார்.

யார் பிரேமதாசா?

எஸ்ஜேபி தலைவர் ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியை ஏற்க மறுத்ததற்காக பெருமளவில் விமர்சிக்கப்பட்டவர். அவரது போட்டியாளரான ரணில் விக்கிரமசிங்கே அப்போது பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஐக்கிய அரசாங்கத்திற்கு வழிவகுக்க தற்போது பதவி விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

2019 அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தவர் பிரேமதாசா.


இலங்கை மக்கள் விருப்பம்:

தற்போதைய நிலைமைக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பு என்றும், அரசியலில் புத்துணர்ச்சியும் ஆற்றல் மிக்கவர்களுடன் புதிய தொடக்கத்தை விரும்புவதாகவும் கொழும்பிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.

இலங்கையின் நிலை:

இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி மார்ச் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது.

நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு, எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் திணறி வருகிறது.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, நாட்டின் பயன்படுத்தக்கூடிய இருப்பு சுமார் 250 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக தெரிகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு பொது போக்குவரத்தை சீரழித்துள்ளதாகவும் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட போதிய எரிபொருள் இல்லாததால் மின்வெட்டு ஏற்படுவதாகவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த வாரமும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.