பாடகியுடன் காதல் வசப்பட்ட ப்ரேம்ஜி : "இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் வெளிவந்த காதல் கதை"

பாடகியுடன் காதல் வசப்பட்ட ப்ரேம்ஜி : "இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின்  மூலம் வெளிவந்த காதல் கதை"
Published on
Updated on
2 min read

பல வருடங்கள் சிங்கிள்லாகவே வலம் வந்த பிரேம்ஜி, தற்போது தனது பேச்-லர் வாழ்க்கைக்கு பாய் பாய் சொல்லி காதலில் விழுந்துள்ளாராம்.

சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி, இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் வலம் வருகிறார்.

ஆரம்ப காலங்களில், பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவிடம்  உதவியாளராக இருந்த பிரேம்ஜி, ஞாபகம் வருதே படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். 

" வல்லவன் " படத்தின் மூலம்  நடிகராக தனது திரைப்பட பயணத்தை தொடங்கிய பிரேம்ஜி ,தனது திறமையான நடிப்பின் மூலமும், நகைச்சுவை மற்றும் உடல் பாவனைகள் மூலமும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார். இவருடைய " என்ன கொடுமை சார் இது " என்ற பஞ்ச் டையலாக் மூலம்  தமிழ் திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.

பிரேம்ஜிக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் பல வந்த போதிலும், இயக்குநரும் சகோதரர் ருமான  வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் பிரேம்ஜி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து மங்காத்தா, சேட்டை, கோவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். 

இது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு திருமணம் குறித்து எப்போதும்? ஏன் நடக்கவில்லை? இவருக்கு திருமணம் ஆகுமா? என்று சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களும் கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கும்.

அதுமட்டும் இல்லாமல் பிரேம்ஜி எந்த நடிகையின் போட்டோவுக்கு கமெண்ட் போட்டாலும் , காதல் கிசுகிசுகளில் சிக்கிக் கொள்வார். இந்நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பிரேம்ஜி முரட்டு சிங்கிலில் இருந்து வெளிவந்து தற்போது கமிட்டாகியிருக்கிறார்.

பிரேம்ஜி மற்றும் வினைத்தா இருவரும் ஒருவரையொருவர் காதலிக் கிறார்களா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது, அதற்க்கான காரணம் வினைத்தா தான், பிரேம்ஜி உடன் இருக்கும் புகை படத்தைப் முதலில் பகிர்ந்துள்ளார். அதன் பின்னதாக தான் பிரேம்ஜி - வினைத்தாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, 

"உன் கண்களில், நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி, நான் என் கைகளுக்கு இடையில், இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன்" என தலைப்பிட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

வினைத்தா பதிவிட்டு இருக்கும் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். பல ஆண்டு காலமாக திருமணம் எப்போ? எப்போ? என்று கேட்ட ரசிகர்கள் பலர், உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com