கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் தாறுமாறாக உயரப்போகும் வீட்டின் விலை

ஊரடங்கு பொது முடக்கம் காரணமாக கட்டுமானப் பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டுமான தொழில் என்பது பெரிதும் பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளது.  

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் தாறுமாறாக உயரப்போகும் வீட்டின் விலை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொது முடக்கம் என்பது தொடர்ச்சியாக அமலில் இருந்த நிலையில் பொருளாதார பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணமாகவே இருந்தது .குறிப்பாக ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களான டீசல் பெட்ரோல் சமையல் எரிவாயு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை என அனைத்துமே தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்திலே காண முடிந்தது.

இதனால் பொருட்களை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் முதல் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் வரை என அனைவருமே அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் தொடர்ந்து பொருளாதார பாதிப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் என்பதும் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாலது போல் பொருட்களின் விலை எட்டா தூரத்தில்  இருக்கின்றது . குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் 20 சதவீதம் விலை ஏற்றத்துடன் காணப்பட்ட கட்டுமான பொருட்களின் விலை தற்போது 40 சதவீதம் வரை விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது.

குறிப்பாக கட்டுமானப் பொருட்களான மணல் சிமெண்ட்  செங்கல் ஜல்லி மற்றும் ஸ்டீல் கம்பிகள் ஆகியவற்றின் விலைகள் தொடர்ச்சியாகவே அதிகரித்த வண்ணமே உள்ளது .அதிலும் கட்டுமானத் துறையில் அதிக அளவு பயன்படுத்த கூடிய சிமெண்ட் மற்றும் ஸ்டீல் கம்பிகளின் விலை மற்றும் பெரிதளவில் விலை ஏற்றத்தை  சந்தித்துள்ளதாகவும் ,கடந்த 60 ஆண்டு காலத்தில் குறிப்பாக 6 மாத வித்தியாசத்தில் இதுபோன்ற 40 சதவீத கட்டுமான பொருட்களின் விலை உயர்வை இதுவரை சந்தித்ததில்லை என்றும் கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கிற்கு முன்பு ஒரு மூட்டை சிமெண்ட் இன் விலை ரூபாய் 300 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது 600 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது அதேபோல் கட்டுமானக் கம்பிகள் ஒரு டன் 68 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மணலின் விலை ஒரு யூனிட் 5000 என்று விற்கப்பட்ட நிலையில் தற்பொழுது 6000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது மேலும் செங்கல் ஒரு லோடு 18 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேபோல் ஜல்லிகளின் விலையும் 3000 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது 4000 மேல் விற்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் கட்டுமானத் தொழிலை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும்   விவசாயத் தொழிலுக்கு பிறகு அதிக அளவில் மக்கள் வேலை பார்க்கக் கூடிய ஒரு இடமாக கட்டுமான தொழில் பார்க்கப்படுகிறது.இந்த தொடர் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் பல்வேறு இடங்களில் பொருட்களின் விலை குறையும் வரை நஷ்டத்திற்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டாம் என்று கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டதால் கட்டுமான தொழிலாளர்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

அதிலும் கட்டுமான தொழிலை நம்பி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளனர் .தமிழகம் முழுவதும் கட்டுமான தொழில் சார்ந்த 20 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறுகின்றனர். தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கட்டிடத்தின் உரிமையாளர் கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஊரடங்கு பொதுமுடக்கத்தை பயன்படுத்தி,    அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் 40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டுமான பொருட்களின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் மத்திய அரசு உடனடியாக கட்டுமான விலை பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து உடனடியாக கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் அப்படி பொருட்களின் விலை குறைக்க படாமல் விலையேற்றம் நீடித்தால் கட்டுமான தொழில் என்பது பெரிய அளவில் பாதிக்கப்படும.இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வேலையிழப்பிற்கு தள்ளப் படுவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.