புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை  திறந்து வைத்தார் பிரதமர் மோடி:

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை  திறந்து வைத்தார் பிரதமர் மோடி:

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் வார்க்கப்பட்ட தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்தததாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடனும்  அவர் கலந்துரையதாக தெரிகிறது.

6.5 மீட்டர் உயரம் மற்றும் 9500 கிலோகிராம் எடை கொண்ட வெண்கலத்தால் ஆன தேசிய சின்னம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மத்திய மண்டபத்தின்  உச்சியில் வார்க்கப்பட்டுள்ளதாக செதிகள் தெரிவிக்கின்றன. 6500 கிலோகிராம் எடையுள்ள எஃகு துணை அமைப்பு சின்னத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கூரையில் தேசிய சின்னத்தை வார்ப்பதற்கான கருத்து செயல்முறை மற்றும்  களிமண் மாதிரி, கணினி கிராபிக்ஸ் முதல் வெண்கல வார்ப்பு மெருகூட்டல் வரை எட்டு வெவ்வேறு கட்டங்களில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

.